For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயேந்திரர்: காவலை நீட்டிக்க கோரி போலீஸ் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jayandrarஜெயேந்திரரின் போலீஸ் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கக் கோரி காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனுத் தாக்கல்செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ஜெயேந்திரரின் போலீஸ் காவலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது திங்கள்கிழமைதான் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துவிட்டார்.

ஜெஜேந்திரரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் அனுமதியளித்ததை எதிர்த்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சி நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி, தீர்ப்பின் நகல் கிடைத்தஅடுத்த சில மணி நேரங்களில் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை வழக்கறிஞர் ரவி அனந்தபத்மநாபன் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

சங்கராச்சாரியாரை 3 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்ட காஞ்சி நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி தவறானது. வழக்கின் மீதுமுழு கவனத்தையும் செலுத்தாமல் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார் மாஜிஸ்திரேட்.

போலீஸ் காவலில் ஜெயேந்திரர் விசாரிக்கப்படும்போது ஒரு வழக்கறிஞரும் உடன் இருக்க வேண்டும் என்ற எங்களதுகோரிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார். இது அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு மாறாகஅமைந்துள்ளது.

நீதிமன்றக் காவலில் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட பின், திடீரென அவரை போலீஸ் காவலுக்கு மாற்றியது சட்டப்படிதவறு.

மேலும் சங்கராச்சாரியாரின் வயதையோ, உடல் நலத்தையோ கூட கருத்தில் கொள்ளாமல் போலீஸ் காவலில் மாஜிஸ்திரேட்அனுப்பியுள்ளார். கொலை வழக்குத் தொடர்பாக எல்லா விவரங்களையும் போலீசார் திரட்டி விட்டனர். மேலும் விவரம்தேவையெனில் சிறையிலேயே வைத்து விசாரிக்க முடியும்.

பழிவாங்கும் நோக்கத்தில் தான் அவரை போலீஸ் காவலில் தமிழக அரசு எடுத்துள்ளது. இதன்மூலம் அவரை அவமானப்படுத்தமுயற்சி நடக்கிறது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி ஏ.கே.ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கராச்சாரியார் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் சுப்பிரமணியமும், போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் துளசியும் ஆஜராயினர்.

அப்போது பேசிய வழக்கறிஞர் துளசி, ஜெயேந்திரரின் போலீஸ் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கக் கோரி காஞ்சிபுரம்முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப் போகிறோம் என்றார்.

இதற்கு சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். 3 நாள் காவலே தவறு என்று மேல்முறையீடுசெய்திருக்கிறோம். இந் நிலையில் மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்புக் கோருவதா என்று கேட்டார் அவர்.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

அன்றைய தினம் தான் சங்கராச்சாரியாரின் போலீஸ் காவலும் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X