For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரராமன் ரூ. 1 கோடி கேட்டாரா ??!!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதான கதிரவன் தொடர்ந்து இரண்டாவது நாளாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ரகசியவாக்குமூலம் அளித்தான்.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதானவர்களில் கதிரவன் போலீஸ் விசாரணையின்போது அப்ரூவராக மாறிவிட முன்வந்துள்ளான். இவன் கொடுத்த தகவல்கள் தான் சங்கராச்சாரியாரை மடக்க போலீசாருக்கு முக்கியக் காரணமாக இருந்தன.

போலீசாரிடம் கதிரவன் கொடுத்த வாக்குமூலத்தில், ஜெயேந்திரரை கூலிப்படைத் தலைவன் அப்பு அடிக்கடி சந்திப்பான் என்றும்,சங்கரராமனைக் கொலை செய்யத் தாமதம் ஏற்பட்டபோது, ஜெயேந்திரர் கோபமடைந்து அந்த வேலையை வேறுகூலிப்படையினரிடம் கொடுக்கப் போவதாக அப்புவிடம் சொன்னதாகவும், கொலைக்கும் பின் நாகலாந்திற்கு தப்பிச் செல்லதிட்டமிட்டோம் என்றும் கூறியிருந்தான்.

இதையடுத்து காஞ்சிபுரம் 2வது மாஜிஸ்டிரேட் தாமோதரன் முன் கதிரவன் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டான். அவரிடம்கதிரவன் சுமார் 20 நிமிடங்கள் ரகசிய வாக்குமூலம் அளித்தான். அவன் வாக்குமூலம் தந்தபோது யாரும் நீதிமன்றத்துக்குள்அனுமதிக்கப்படவில்லை. பூட்டிய அறையில் அவன் வாக்குலமூலம் தந்தான்.

குற்றவாளியிடம் சில கேள்விகளை நீதிபதி தாமோதரன் கேட்டார். அதற்கு பதில் அளிக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார்.அதனையடுத்து கதிரவனை போலீசார் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

24 மணி நேர அவகாசத்துக்குப் பின் கதிரவன் மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டான். இதனையடுத்த மூடியஅறையில் நீதிபதியிடம் அவன் இரண்டாவது நாளாக தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான்.

அந்த வாக்குமூலத்தில்,

சங்கர மடத்திற்கு சங்கரராமன் அடிக்கடி மொட்டை கடிதம் எழுதுகிறார். அவரை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று அப்புஎங்களிடம் கேட்டார். பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்று நான் கூறினேன். அதனையடுத்து சங்கரராமனிடம்பேசியபோது, ரூ.1 கோடிக்கு மேல் பணம் எதிர்பார்ப்பது போல் அவரது பேச்சுக்கள் இருந்தன.

பின்பு அப்பு செல்போனில் ஒருவரிடம் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் என்னிடம் வந்து, சங்கரராமனுக்கு அவ்வளவுபணம் தர வேண்டியது இல்லை. அவரைத் தீர்த்து விட வேண்டியதுதான் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் அப்புவின் ஆட்களோடு நான் காஞ்சிபுரம் சென்றேன். அங்கு சங்கரராமனின்புகைப்படத்தை எல்லோருக்கும் கொடுத்தேன். அப்புவின் முன்னிலையில் கொலைத் திட்டம் வகுக்கப்பட்டது.கூலிப்படையினருடன் சங்கரராமனின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அவர் இல்லாதததால் கோவிலுக்கு சென்று தீர்த்துக்கட்டினோம்.

இவ்வாறு போலீசாரிடமும் நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

கதிரவன் சுமார் 2 மணி 20 நிமிடங்கள் ரகசிய வாக்குமூலம் அளித்தான். முன்னதாக 164-வது சட்டப்பிரிவின்படி அளிக்கும்ஒப்புதல் வாக்குமூலத்தின்படி உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு சம்மதிக்கிறீர்களா என்று நீதிபதிகேட்டதற்கு கதிரவன் சம்மதன் என்று கூறினான்.

கதிரவன் வாக்குமூலம் அளிக்கும்போது நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அவனது முகத்தை துண்டைப் போட்டு மூடியபடி வெளியே கொண்டு வந்த போலீசார், வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டுபறந்தனர். அவனருகில் செல்லக் கூட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சங்கரராமன் ரூ. 1 கோடி கேட்டதாக கதிரவன் கூறியிருப்பது அதிர்ச்சியைத் தந்துள்ளது. இவ்வாறு அவன் வாக்குமூலம்தந்திருப்பது உண்மை எனில் அது வழக்க்கின் போக்கையே திசை திருப்பும் சக்தி மிக்க குற்றச்சாட்டாக அமையும் எனவழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X