சங்கராச்சாரியாரிடம் எஸ்.பி. டேவிட்சன் விசாரணை
காஞ்-சி-பு-ர-ம்:
காஞ்சி சங்கராச்சாரியாரிடம் மூன்றாவது நாளாக இன்றும் காலை முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் இன்று காஞ்சிபுரம் எஸ்.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது.
காஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து சங்கராச்சாரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை விவரங்களைபோலீசார் வெளியிடாவிட்டாலும், கொலை தொடர்பாக தாங்கள் திரட்டிய ஆதாரங்களைக் காட்டி சங்கராச்சாரியாரை போலீசார்துருவி வருகின்றனர்.
3 முறை மருத்துவ சோதனை:
அவருக்கு தினமும் 3 முறை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மூத்த அரசு மருத்துவர் தலைமையிலான குழுஅவருக்கு 8 மணி நேரத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனை நடத்தி வருகிறது.
உணவு சமைக்கும் பிராமணர்:
அவருக்கு உணவு சமைக்க பிராமணரான ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமைத்துத் தரும் உணவேசங்கராச்சாரியாரிடம் அளிக்கப்படுகிறது.
மேலும் பூஜைகள் போன்றவற்றை நடத்தவும் சங்கராச்சாரியாருக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இதுவரை சங்கராச்சாரியாரிடம் சுமார் 400 கேள்விகள் வரை கேட்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவற்றுக்கு அவர்பதிலே சொல்லவில்லை, அமைதியாக அவர் அமர்ந்திருந்தார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை அவரது போலீஸ் காவல் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை காலை 10.30 மணிக்கு அவர் காஞ்சிபுரம்மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், விசாரணைக்கு ஜெயேந்திரர் ஒத்துழைப்பு தர மறுத்து வருவதால் விரக்தி அடைந்துள்ள போலீசார், அவரது காவலைமேலும் ஒரு நாள் நீட்டிக்கக் கோரி காஞ்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications