அப்பு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில்அவனது பாஸ்போர்ட்டை சென்னை உயர் நீதிமன்றம் முடக்கியுள்ளது.
சங்கரராமனைக் கொலை செய்ய கூலிப் படையைத் தயார் செய்த கன்சாமி கோபால் கிருஷ்ணசாமி என்ற அப்பு மீது ஏற்கனவேஇன்னொரு வழக்கில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடந்த 4ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவன் தாக்கல் செய்த ஒரு மனுவில், தான் சிகிச்சைக்காகஅமெரிக்கா செல்ல விரும்புவதாகவும், அதற்கு அனுமதி அளிக்குமாறும் கோரியிருந்தான்.
அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அப்பு அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கியது. இந் நிலையில், சங்கரராமன் கொலைவழக்கில் அப்பு முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து அப்பு தலைமறைவானான்.
தலைமறைவாகி விட்ட அவன் அமெரிக்காவுக்குத் தப்பிவிடுவதைத் தடுக்க, காவல்துறையின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அப்பு மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது சங்கரராமன்கொலை வழக்கிலும் தேடப்பட்டு வருகிறான். எனவே, அவன் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பாஸ்போர்ட்டைமுடக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி என். தினகர், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.விசாரணைக்குப் பின், அப்பு வெளிநாடு செல்ல பிறப்பிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தும், அப்புவின் பாஸ்போர்ட்டைமுடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications