அண்ணாமலை பல்கலை.யில் விடிய விடிய வன்முறை!
சிதம்பரம்:
புகழ் பெற்ற சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடிய விடிய மாணவர் வன்முறை நடந்தது.
இப்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்ட இந்தக் கலவரம் தொடர்பாக 8 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சிவசக்தி என்ற மாணவர் படித்து வந்தார். சேத்தியாதோப்பை சேர்ந்தசிவசக்தி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
திங்கள்கிழமை காலை இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூமருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் விடுதிக்கு அனுப்பப்பட்டார்.
பிற்பகலுக்கு மேல் மீண்டும் சிவசக்தி உடல் நலம் பாதிக்கப்பட்டார். மாலையில் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு சகமாணவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிவசக்தி இறந்துவிட்டார்.
இதையடுத்து மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். மருத்துவர்கள் சரியான முறையில்சிகிச்சை அளிக்காத காரணத்தால்தான் சிவசக்திஇறந்து விட்டார் என்று கூறி வன்றையில் இறங்கினர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். துணைவேந்தர் இல்லத்தையும்அவர்கள் முற்றுகையிட்டனர். விடுதிகள், வகுப்பறைகள் மீது மாணவர்கள் கல்வீசித் தாக்கினர். பல்கலைக்கழக ஜீப்புகளுக்கும்அவர்கள் தீ வைத்தனர். பல்கலைக்கழக வாகனங்கள் கவிழ்த்தி விடப்பட்டன.
விடிய விடிய நடந்த இந்தக் கலவரத்தை போலீஸார் கடுமையாகப் போராடி அடக்கினர். தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக போலீஸார் கூறியுள்ளனர். இந்த வழக்கில் 8 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகமும் மூடப்பட்டுள்ளது. சேத மதிப்பு ஆராயப்பட்டுவருகிறது.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications