கன்னட சினிமா: போராட்டம், வன்முறை
பெங்களூர்:
பிறமொழித் திரைப்படங்களை 3 வாரம் கழித்தே திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கட்டாயமாக அமல்படுத்தக் கோரிகன்னட திரையுலகினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னட முன்னணி நடிகர்கள் விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா, சிவராஜ்குமார் உட்பட 4,000க்கும் அதிகமான திரைக்கலைஞர்கள் பசவேஸ்வரா சந்திப்பிலிருந்து கர்நாடக சட்டசபை கட்டடம் நோக்கி ஊர்வலம் சென்றனர்.
இருதய நோய் காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஜ்குமார் காரில் வந்து ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.அப்போது அவர், நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆனால் எங்களது கன்னட மொழி வாழ வேண்டும். இந்தப்போராட்டத்தின் மூலம் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்டியிருக்கிறோம் என்று பேசினார்.
விஷ்ணுவர்தன் பேசுகையில், நாங்கள் நீதி கேட்டு போராடுகிறோம். இந்தப் பிரச்சினை மீண்டும் வராதபடி அரசுதான் இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றார்.
ஊர்வலம் சட்டசபை வளாக வாசலை அடையும்போது, திரையுலகினரிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற கர்நாடகமுதல்வர் தரம்சிங் அங்கு வந்தார். அவர் பேசத் தொடங்கியபோது, ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தரம்சிங் இருந்த வேனைநோக்கி செருப்புகளை வீசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தரம்சிங், திரையுலகினரின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவையில் விவாதிப்போம்.கன்னட மொழியையும், கர்நாடகாவையும் காக்க அரசு விருப்பத்துடன் இருக்கிறது.
அதே நேரத்தில் திரையுலகினரின் போராட்டம் திசை திரும்பினால், சட்டம் ஒழுங்கைக் காப்பதில் அரசு உறுதியாக இருக்கும்என்று கூறினார்.
கல்வீச்சு:
பின்னர் கலைந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீதுகல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 5 கார்கள் சேதமடைந்தன.
மேலும் ஒரு கார் மீது தீ வைக்கப்பட்டது. அதில் அந்த கார் பாதி எரிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் ஒருஅலுவலகமும், ஒரு வங்கியின் ஏ.டி.எம்மும் சிறிது சேதமடைந்தன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications