அடித்து, உதைத்து வாக்குமூலம் வாங்கினர்: கதிரவன் !
காஞ்சிபுரம்:
போலீசார் தன்னை அடித்து, துன்புறுத்தி தான் சங்கராச்சாரியாருக்கும் அப்புவுக்கும் எதிராக வாக்குமூலம் வாங்கியதாக,சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான்.
போலீஸார் 5 நாட்களாக தன்னை பல விதத்திலும் கடுமையாக சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கியதாக பரபரப்பானபுகாரைத் தெரிவித்துள்ளார்.
சங்கரராமனைக் கொலை செய்த அப்பு தலைமையிலான கூலிப் படையில் இடம் பெற்றிருந்தவந் கதிரவன். இவரை சென்னைகோடம்பாக்கத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
அப்புவின் டிரைவர் மற்றும் அடியாளான கதிரவன் அப்ரூவராக மாற ஒப்புக் கொண்டதாகக் கூறி அவனை காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் அவனும் மூடிய அறையில் ரகசிய வாக்குமூலம் தந்தான்.
அதில் இந்தக் கொலையைச் செய்ய தூண்டியது சங்கராச்சாரியார் தான் என்றும் அப்பு கொடுத்த உத்தரவையடுத்து இந்தக்கொலையை 6 பேர் கொண்ட கோஷ்டி செய்ததாகக் கூறியிருந்தான்.
வாக்குமூலம் தந்த பின்னர் மீண்டும் போலீஸ் காவலிலேயே இவன் ஒப்படைக்கப்பட்டான். இந் நிலையில் அவனது போலீஸ்காவல் முடிவடைந்தது. இந்தக் காவல் நீட்டிப்புக்கா காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரவன் மீண்டும்ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது நீதிபதி உத்தமராஜிடம் கதிரவன் கூறியதாவது:
ஐயா, கடந்த 3ம் தேதி எனது முதலாளி அப்புவை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டு கோடம்பாக்கத்தில் உள்ளஓட்டலுக்குச் சென்றேன். அப்போது இரவு 10 மணி. அந்த ஹோட்டலுக்கு மப்டி உடையில் வந்த போலீசார், சுந்தர் யார்டா என்றுகேட்டபடி அங்கிருந்த என்னையும் என் நண்பர்களையும் பிடித்தனர்.
அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோயம்பேடு போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு என்னை அடித்து உதைத்தனர். உடைகளைப் பறித்துக் கொண்டு இரவு 12 மணி வரை அடித்தனர்.
நள்ளிரவு வாக்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்குள்ளஒரு வீட்டில் வைத்து என்னை போலீஸார் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.
அடுத்த நாள் மாலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாரமவுண்ட் ஹோட்டலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு அறை எண் 108 மற்றும்109ல் நவம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை அடைத்து வைத்து அடித்தனர். பல விதத்திலும் துன்புறுத்தினர்.
பல சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டேன். பின்னர் வெற்றுத் தாள்களில் வாக்குமூலம் என்ற பெயரில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர். நவம்பர் 9ம் தேதி காஞ்சிபுரம் கூடுதல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு என்னைக் கொண்டு சென்றனர்.
அங்கு தாசில்தார் முன்னிலையில் இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு வற்புறுத்தினர்.அதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக வீடியோப் பதிவின்போது எப்படிப் பேச வேண்டும் என்றும் எனக்குப் பயிற்சி அளித்தனர். இந் நிலையில் நவம்பர் 10ம்தேதி என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஐந்து நாள் போலீஸ் காவலில் போலீஸார் எடுத்துச் சென்றனர். அப்போதும் சித்திரவதைதொடர்ந்தது.
என்னைப் பார்க்க சிறைக்குள் எனது உறவினர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. எனது சகோதரர் பார்க்க வந்தபோதுஅவரைத் தடுத்த போலீஸார் அவரையும் எங்கோ அழைத்துச் சென்று விட்டனர். எனக்கு ஆஸ்த்மா பிரச்சினை உள்ளது. இதற்குசிகிச்சை தரவும் காவல்துறை மறுத்து விட்டது என்றார் கதிரவன்.
கதிரவன் திடீரென்று போலீஸார் மீது பரபரப்பு புகார்களைக் கூறியுள்ளதன் மூலம், சங்கர மடத்துக்கு எதிராக அவன் முன்பு தந்தஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. வழக்கிலும் புதிய திருப்பத்தைஏற்படுத்தியுள்ளது.
சின்னாவும் பல்டி:
அதேபோல முன்பு ஒப்புதல் வாக்குமுலம் தந்த சின்னா என்ற ரஜினியும் தன்னை போலீசார் அடித்துத் துன்புறுத்தித் தான் இந்தக் கொலையில் வாக்குமூலம்வாங்கினர் என்று கூறியுள்ளார். போலீசார் அடித்த அடியில் தனது பற்கள் கூட உடைந்துவிட்டதாகக் கூறியுள்ளான்.
பணத் தகராறால் சிக்கிய கொலையாளிகள் !!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications