ராஜ் டிவியின் ஒளிபரப்பு சாதனங்கள் பறிமுதல்!
சென்னை:
சன் டிவிக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியான ராஜ் டிவியின் நேரடி ஒளிபரப்பு சாதனங்கள்,வெளிப்புற ஒளிபரப்பு வாகனம் ஆகியவற்றை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பொறுப்பில் உள்ள மத்திய தொலைத் தொடர்புத் துறை சமீபத்தில் ராஜ் டிவிக்கு எதிரானநடவடிக்கையில் இறங்கியது.
முதலில் லைசென்ஸ் விதிகளை மீறிய ராஜ் டிவியின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ராஜ் டிவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்தியாவில் இருந்து அப்-லிங்கிங் செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்ட ராஜ் டிவி கடந்த சில நாட்களாகவெளிநாட்டில் இருந்து செயற்கைக் கோளுக்கு அப்-லிங் செய்து தனது ஒளிபரப்பை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில், நேற்று ராஜ் டிவியின் சென்னை தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு சுங்கத துறை அதிகாரிகள் குழுவந்தது. ராஜ் டிவியின் அலுவலகத்தில் இருந்த ரூ. 3 கோடி மதிப்புள்ள வெளிப்புற ஒளிபரப்பு வேன், ரூ. 1.3 கோடி மதிப்புள்ளநேரடி ஒளிபரப்புக்கான சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சாதனம் மற்றும் வாகனத்தை 3 மாதங்களுக்கு முன்புதான் ராஜ் டிவி நிர்வாகம் இறக்குமதி செய்திருந்தது. இறக்குமதிசெய்வதற்குரிய அனுமதியை சுங்கத் துறையிடமிருந்து ராஜ் டிவி நிர்வாகம் பெறவில்லை என்பதால் இக் கருவிகள் பறிமுதல்செய்யப்பட்டதாக சுங்கத்துறை கூறியுள்ளது.
அனுமதியில்லாமல் நடந்த இந்த இறக்குமதி குறித்து கடந்த பா.ஜ.க. ஆட்சியிலேயே இந்த விவகாரம் கிளப்பப்பட்டது. ஆனால்,மூத்த பாஜக தலைவர்களை சரி கட்டியும், தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு மூலமும் பிரச்சனையை அமுக்கியது ராஜ்டிவி.
இந் நிலையில் இப்போது சுங்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளது.
மாறன் வசமுள்ள தொலைத் தொடர்புத் துறை மற்றும் திமுகவின் இன்னொரு அமைச்சரான நிதித்துறை இணையமைச்சர்பழனிமாணிக்கமும் (சங்கத்துறை இவர் கண்ட்ரோலில் தான் வருகிறது) ஆகியோர் கொடுத்த நெருக்குதல் காரணமாகவேசுங்கத்துறை இந்த பறிமுதல் நடவடிக்கையில் இறங்கியதாக புகார் கூறப்படுகிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications