ஜெயேந்திரர்: சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி
டெல்லி:
ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியும், இதில் சிபிஐ விசாரணை கோரியும் முன்னாள்பாஜக எம்.பி. தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் பாஜக எம்.பி. சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் ஒருமனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி லகோத்தி தலைமையிலான பெஞ்ச் அதைத் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டது.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கூட தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு தாக்கல் செய்திருந்தால், வழக்குவிசாரணையின் தன்மை குறித்து நீதிமன்றம் ஒரு கருத்துக்கு வர ஏதுவாக இருந்திருக்கும்.
உண்மையை அறிய வேறு எந்த ஆவணங்களோ, முயற்சிகளோ மனுதாரரால் செய்யப்படவில்லை. மேலும் மனுதாரர் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரோ கிடையாது.
மேற்கூறியவைகளிலிருந்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட எந்த சிறப்பு சட்ட அதிகாரமும் கிடையாது என்பதுதெளிவாகிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பையொட்டி கோர்ட் ஹாலில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications