காவிரி புதைமணலில் சிக்கி 2 பெண்கள் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

Kokilaதிருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் புதைமணலில் சிக்கி இரண்டு பெண்கள் பலியாயினர்.

பெங்களுரைச் சேர்ந்தவர் மாலா (வயது 37). பெங்களூலிருந்து திருச்சிக்கு உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்த இவர்உறவினர்களுடன் காவிரியில் குளிக்க விரும்பினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் வந்த அவர்கள் அம்மா மண்டபம் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது மாலாவும் அவரதுஉறவினர் பெண் கோகிலாவும் (16) எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கிக் கொண்டனர்.

Malaஅவர்களைக் காப்பாற்ற முயன்ற ஷாலினி, கவிதா, மங்களம் ஆகியோரும் புதைமணலில் சிக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தில்இருந்தோர் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அவர்களால் மாலாவையும் கோகிலாவையும் காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாகஇறந்தனர்.

இருவரது உடல்களையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர். மற்ற 3 பேரும் ஸ்ரீரங்கம் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இதில் ஷாலினிக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+