உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டாம்: ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

தனக்கு ஜாமீன் கோரியோ, பொதுநலன் கருதியோ உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டாம் என்று தமது வழக்கறிஞர்களைஜெயேந்திரர் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுவேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் கிருண்சாமி தினமும் மாலை நேரத்தில் சந்தித்து வருகிறார்.

நேற்று மாலை ஜெயேந்திரரை சந்தித்து விட்டு அவர் வருகையில், நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:

தன் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக ஜாமீன் கோரியோ, பொதுநலன் கருதியோ உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டாம் என்றுதனது வழக்கறிஞர் குழுவை ஜெயேந்திரர் கேட்டுக்கொண்டார். அவருக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் தினகர், சுப்பிரமணியம்ஆகியோரிடம் இதைத் தெரிவிக்க ஜெயேந்திரர் என்னிடம் கூறினார்.

இரு வழக்குகளிலும் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்வதா அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதா என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும்என்றார் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+