2 வழக்குகளிலும் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் மனு
சென்னை & காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் மீண்டும் ஜாமீன் கோரியும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரியும்சங்கராச்சாரியார் சார்பில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொலை வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த மனுவை கடந்த சனிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது. இந் நிலையில் இன்று மீண்டும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் அப்பீல் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சொன்னார்கள். இதனால் தான் எனதுமுதல் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இப்போது போலீஸ் காவலில் வைத்து என்னிடம் விசாரணை நடத்திமுடிக்கப்பட்டுவிட்டது.
சந்தேகப்படும் குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பும் முடிந்துவிட்டது. மேலும் கதிரவனும், சின்னாவும் சொன்னவாக்குமூலத்தை வைத்து என்னைக் கைது செய்ததாக போலீசார் கூறினர். ஆனால், அவர்கள் இருவரும் தங்களை போலீசார்துன்புறுத்தி போலி வாக்குமூலம் வாங்கியதாக நீதிபதியிடம் கூறியுள்ளனர்.
இதனால் என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சங்கராச்சாரியாரின் சிறைக் காவலை காஞ்சிபுரம் நீதிமன்றம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து இன்றுஉத்தரவிட்டதையடுத்து, இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு திங்கள்கிழமை (29ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
ஆடிட்டர் வழக்கில்...
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் புதிதாக ஜாமீன் கோரி, ஜெயேந்திரர் சார்பில் அவரதுவழக்கறிஞர் தினகரன், சென்னை முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ஜெயேந்திரர் கூறியிருப்பதாவது:
இந்த தாக்குதல் வழக்கிற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் நடந்து 2 வருடங்களுக்குப் பின் வேண்டுமென்றேஎன்னை இதில் தொடர்புபடுத்தி பொய் வழக்கு போட்டுள்ளார்கள். எனக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அவர்களுக்குவேண்டிய பணிகளை நான் செய்ய வேண்டும். எனவே என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவும் நீதிபதி முருகேசன் முன்னிலையில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications