கட்டணத்தை உயர்த்த பஸ் அதிபர்கள் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள்சங்கங்களின் சம்மேளனம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 2,000 பேருந்து உரிமையாளர்கள் சுமார் 6,000 பேருந்துகளை இயக்கி வருகின்றனர். சிற்றூர்களுக்கும் தனியார்பேருந்துகளை இயக்கி வருவதால் பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக டீஸல் விலையை மத்திய அரசு உயர்த்தும்போதெல்லாம், பேருந்து கட்டணத்தையும் மாநில அரசுகள்உயர்த்திள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மக்கள் நலன் கருதி பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் டீசல் விலையை குறைக்கஅரசு போராடி வருகிறது.

கேரளாவில் பேருந்து கட்டணம் கிலோ மீட்டருக்கு 42 பைசாவாகவும், கர்நாடகம், ஆந்திராவில் 35 பைசாவாகவும் உள்ளது.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவாக கிலோ மீட்டருக்கு 28 பைசா வசூலிக்கப்படுகிறது.

மேலும் பேருந்துகளின் விலை, வரிகள், பராமரிப்பு செலவு, உதிரி பாகங்கள் விலை ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளது.எனவே பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டால் எங்களால் அவற்றை இயக்க முடியாது.

இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்கள்பேருந்துகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லையென்றால், ஜனவரி 1ம் தேதி முதல் தனியார் பேருந்துகள் ஓடாது. இது தொடர்பாகவருகிற 30ம் தேதி பேருந்து உரிமையாளர்கள் கூடி முடிவெடுக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

இதை தமிழக அரசுக்கு மனுவாகவும் அனுப்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+