சங்கரராமன் வழக்கில் மேலும் 15 நாள் சிறை: ஆடிட்டர் வழக்கில் 14 நாட்கள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சி:

சங்கரரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரின் சிறைக் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் (இது கொலை முயற்சி வழக்காகும்) அவருக்கு 14 நாட்கள்நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேலும் இரண்டு வாரங்களுக்கு சங்கராச்சாரியார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

சங்கரராமன் கொலை வழக்கில் இன்றுடன் அவரது நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையொட்டி, அவர் காலை 9.40க்கு வேலூர்சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் உத்தமராஜன் முன் காலை 11 மணிக்குஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை டிசம்பர் 10ம் தேதி வரை (15 நாட்கள்) நீட்டிப்பதாக மாஜிஸ்திரேட்அறிவித்தார்.

இதையடுத்து சங்கராச்சாரியார் காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் 2 மணி நேரம்ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டார்.

ஆடிட்டர் வழக்கில்...

இதைத் தொடர்ந்து அங்கேயே தயிர் சாதம் அருந்தினார். பின்னர் பகல் 1.20 மணியளவில் சங்கராச்சாரியார் சென்னை அழைத்துச்செல்லப்பட்டார்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வரும் சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிமன்றத்துக்குஅவர் கொண்டு செல்லப்பட்டார். நீதிபதி உமா மகேஸ்வரி முன் பிற்பகல் 3 மணியளவில் சங்கராச்சாரியார் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சங்கராச்சாரியாரைப் பார்த்து, நீங்கள் எந்த வழக்கிற்காக இங்கே ஆஜர்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்று தெரியுமா என்றுகேட்டார். இதற்கு சங்கராச்சாரியார் பதிலளிக்காமல் மெளனமாக இருந்தார்.

உடனே மாஜிஸ்திரேட், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் வழக்குக்காக இங்கே ஆஜர்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்றார்.இதையும் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ஜெயேந்திரர்.

அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயரத்தினம், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில்ஜெயேந்திரருக்குத் தொடர்பிருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைவிசாரித்தபோது, ஆடிட்டர் தாக்குதல் வழக்கிலும் ஜெயேந்திரர், கதிரவன், சுந்தர் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதுதெரியவந்தது என்றார்.

இதையடுத்து ஜெயேந்திரரிடம் திரும்பிய மாஜிஸ்திரேட், இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு,இது பொய் கேஸ் என்று ஜெயேந்திரர் பதிலளித்தார்.

தொடர்ந்து உங்களை போலீசார் துன்புறுத்தினார்களா என்று மாஜிஸ்திரேட் கேட்க, அப்படி ஏதும் நடக்கவில்லை என்றார்ஜெயேந்திரர்.

இதைத் தொடர்ந்து சங்கராச்சாரியாரை டிசம்பர் 9ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.அதே நேரத்தில் இந்த 14 நாள் காவல் முடிந்த பின் சங்கராச்சாரியாரை மீண்டும் இங்கே கொண்டு வர வேண்டிய அவசியமில்லை,அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொள்வேமா என்றார்.

இந்த உத்தரவையடுத்து சங்கராச்சாரியார் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தஇரு வழக்குகளிலும் மேலும் 15 நாட்களுக்கு சங்கராச்சாரியார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

இரு ஆண்டுகளுக்கு முன் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியாரை இப்போது தான் தமிழக அரசுசேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் ஜெயேந்திரை ஆஜர்படுத்தப்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிநீதிமன்றத்திலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+