காட்டி கொடுத்த போலீஸ்: குற்றவாளிகளின் வக்கீல்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது குற்றவாளிகள் என்ற பெயரில் காட்டிக் கொடுக்க, சங்கரராமன்குடும்பத்தினரிடம், மாட்டு பாஸ்கரும், ஸ்டாலினும் முன்பே போலீசாரால் அடையாளம் காட்டப்பட்டதாக அவர்களதுவழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மத்திய சிறையில் நடந்த குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பின்போது 6 கொலையாளிகளையும் சங்கரராமனின்மனைவி பத்மாவும் மகள் உமாவும் அடையாளம் காட்டினர்.

இதில் ஸ்டாலின் என்ற சில்வஸ்டர், மாட்டு பாஸ்கர் ஆகியோரும் அடங்குவர்.

இந் நிலையில் இந்த இருவர் சார்பிலும் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்திடம் வழக்கறிஞர் டார்வின் விஸ்டம் ஒரு மனு புகார் தாக்கல்செய்தார். அதில்,

கடந்த 19ம் தேதி இந்த இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்துஅவர்கள் நேராக சிறைக்குக் கொண்டு செல்லப்படவில்லை.

அதற்குப் பதிலாக காஞ்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒரு மணி நேரம் இவர்கள்வைக்கப்பட்டிருந்தபோது, சங்கரராமனின் மனைவி பத்மாவும் மகள் உமாவும், மகன் ஆனந்த் சர்மா ஆகியார் போலீசாரால் அங்குஅழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் மாட்டு பாஸ்கரையும், ஸ்டாலினையும் போலீசார் காட்டினர். இவர்கள் தான் குற்றவாளிகள் என்று போலீசார்அவர்களிடம் கூறினர்.

இதன் பின்னர் தான் சென்னை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. அப்போது தான் ஸ்டாலினையும், மாட்டுபாஸ்கரையும் மற்றவர்களோடு சேர்த்து சங்கரராமன் குடும்பத்தினர் அடையாளம் காட்டினர் என்று அந்த புகார் மனுவில்கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றக் காவலில் அனில், அம்பி:

இதற்கிடையே, சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸ் காவலில் அனுப்பப்பட்ட அம்பி என்ற அம்பிகாபதி மற்றும் அனில்ஆகியோர் மீண்டும் நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டனர்.

இவர்களது போலீஸ் காவல் முடிந்த நிலையில் இருவரும் இன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போலீஸ் காவலில் இருந்தபோது போலீஸார் துன்புறுத்தினார்களா என்று நீதிபதி உத்தமராஜன் கேட்டார். இருவரும் இல்லை என்றுபதிலளித்தனர். அதன் பின்னர் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+