இந்தியாவுடன் வர்த்தகம்: மலேசியா தீவிரம்
சென்னை:
இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம்மலேசியாவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.
மலேசியாவில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை மையத்தின் தலைவர் செள ஜூ மெங் இது தொடர்பாக நிருபர்களிடம்கூறியதாவது:
தகவல் தொலை தொடர்பு, கால் சென்டர் மற்றும் உயிர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகஉறவை அதிகரிக்கும் வகையில் மலேசியாவில் வருகிற ஜனவரி மாதம் 17, 18 தேதிகளில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மாநாட்டை மலேசியா பிரதமர் அப்துல்லா அகமது பதாவி தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் சார்பில் முக்கிய அமைச்சரும்திட்டக்குழு அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் தொழில் முதலீட்டை அதிகப்படுத்த இந்திய வியபாரிகளும், அரசாங்க அதிகாரிகளும் இந்த வாய்ப்பைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மலேசியாவில் இரண்டு மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் இரு தரப்பு வர்த்தகத்தில் சீனாவை விட இந்தியாபின்தங்கியே இருக்கிறது.
சீனாவுடன் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவாக இருக்கும் வர்த்தகம் இந்தியாவுடன் 4 பில்லியன் அமெரிக்கடாலர்களாக மட்டுமே இருக்கிறது.
மலேசியா தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சீனாவிற்கும் நுழைவாயிலாக உள்ளது. மலேசிய மக்கள் தொகையில் சீனர்களின்எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகும்.
இந்தியாவில் உள்கட்டமைப்பு, எண்ணெய், மின்சாரம், தொலைதொடர்பு, சுற்றுலா மற்றும் மனித வள மேம்பாடு ஆகியதுறைகளில் 450 மில்லியன் டாலர் அளவிற்கு மலேசியா முதலீடு செய்துள்ளது. இதை அதிகப்படுத்த முடியும் என்று கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications