மாயூரணி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இலங்கை மாணவி மாயூரணி கொலை வழக்கை சிபிஐ மாற்றக் கோரும் வழக்கின் மீதான தீர்ப்பை மதுரை உயர் நீதிமன்றக் கிளைஒத்திவைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோலைமலைத் தேவரின் வீட்டு மடியில் தங்கிப் படித்து வந்த மாயூரணி, கடந்த ஆண்டுஏப்ரல் 24ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த வழக்கில் பக்கத்து அறையில் தங்கியிருந்த மாணவரையும் அவரது நண்பரையும் முதலில் போலீசார் கைது செய்தனர்.

Solamali Devar with his Wifeஆனால மாயூரணிக்கு சோலைமலைத் தேவர் தான் செக்ஸ் டார்ச்சர் தந்து வந்ததாகவும், கொலையை மாணவனை விட்டு செய்யச்சொன்னதே அவர் தான் என்றும் புகார் எழுந்தது. முதலில் தேவர் மீதும், அவரது வீட்டு வேலையாட்கள் மீதும் கைது நடவடிக்கைஎடுத்த காவல்துறை பின்னர் தேவரைக் காப்பாற்றும் வேலையில் இறங்கியது.

இந் நிலையில், இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கவும், உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைக்கவும் காவல்துறைமுயல்வதாகக் கூறி மாயூரணியின் மாமா மோகன்தாஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையை சிபிஐக்குமாற்றவும் மோகன்தாஸ் கோரியிருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன், தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+