டிசம்பர் 6ல் டெல்லியில் தமுமுக போராட்டம்
கோவை:
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 12ம் ஆண்டு தினத்தையொட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தின் முன்ஆர்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இதில் 500 பேர் பங்கேற்பார்கள் என அந்தக் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா கோவையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துவிட்டதாகவும், அதே தினத்தன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசுஅலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் தங்கள் கட்சி நடத்தும் என்றும் தெரிவித்தார்.
மசூதியை மீண்டும் கட்டித் தர வேண்டும், அதை இடித்தவர்கள் மீது லிபரான் கமிஷனில் விரைவில் விசாரணையை நடத்தி முடித்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் போராட்டம் நடக்கிறது.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் வழங்கப்படும்.
மீண்டும் இந்துத்துவாவுக்குத் திரும்பப் போவதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அது எப்போது அந்தப் பாதையைவிட்டு வெளியேவந்தது?. கடந்த தேர்தலில் அமைதியை விரும்புவோர் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு பாடம் கற்பித்துவிட்டார்கள். இனிஎன்ன மாதிரியான அரசியல் நாடகங்கள் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது என்றார் ஜவாகிருல்லா.


Click it and Unblock the Notifications
