போலீஸை கண்டு ஓடிய பாமக எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

கோயம்பத்தூர்:

கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் போலீஸாரைக்கண்டு பயந்து தப்பி ஓடினார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி பாமக உறுப்பினர் வேல்முருகன். இவர் அதிமுக பஞ்சாயத்துக் கவுன்சிலர்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவரோடு அவரது அண்ணன் திருமால்வளவன் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில்வேல்முருகனை போலீஸார் கைது செய்தனர். ஆனால் ஏற்கனவே அவர் முன் ஜாமீன் பெற்றிருந்ததால், ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.

தற்போது கோவையில் தங்கியிருந்து தினசரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டு வருகிறார்.

இந் நிலையில் தனது கட்சியினருடன் அவர் கையெழுத்துப் போட வந்தார். அப்போது அவர் வந்த டெம்போ வேனை போலீஸார்வழிமறித்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் பதிவு எண் இல்லை. எனவே வாகனத்தின் ஆவணங்களை போலீஸார் கேட்டனர்.ஆனால் வாகனத்துக்குரிய முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து வேல்முருகனை போலீஸார் விசாரிக்க முற்பட்டனர். இதையடுத்து அவரும், அவருடன் வந்தவர்களும்வண்டியிலிருந்து இறங்கி ஓடினர். அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 2 பேர் மட்டும்பிடிபட்டனர். மற்றவர்கள் ஓடி விட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+