14 பேர் ரகசிய வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்கரராமன் கொலை வழக்கில் 14 பேர் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசியவாக்குமூலம் அளித்தனர்.
சங்கரராமனின் மனைவி, மகன், மகள், சஸ்பெண்ட செய்யப்பட்ட ஏட்டு கண்ணன் மற்றும் சங்கரமடத்தின் புகைப்படக்காரர் ராமுஆகியோர் கடந்த 23, 24ம் தேதிகளில் வாக்குமூலம் அளித்தனர்.
இந் நிலையில் மேலும் 14 பேர் உத்தரமேரூர் நீதிபதி ராமஜெயத்தின் முன்பு இன்று ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அப்போதுநீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. போலீசார் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வாக்குமூலம் அளித்தவர்களில் ஒருவரான கண்ணன், ஒழுங்கீனத்துக்காக காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட்செய்யப்பட்டவராவார். அதற்குப் பின் சங்கர மடத்தில் வேலை பார்த்தார். அங்கு ரூ.40 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாகஜெயேந்திரரால் குற்றம் சுமத்தப்பட்டவர்.












Click it and Unblock the Notifications