கோவையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

Arun Kumar, Devi, Gowsika and Vasantha

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் ஒருவர் உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை லிங்கசெட்டித் தெருவில் வசிப்பவர் வீராச்சாமி (55). பழைய பேப்பர், இரும்புப் பொருட்களை விற்பது இவரது தொழில்.இவர் மனைவி வசந்தா (45), மகள் தேவி (25), மகன் அருண்குமார் (23), பேத்தி கெளசிகா (6) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இன்று காலை 8 மணி வரை கதவு திறக்கப்படாமல் வீடு பூட்டப்பட்டிருந்தது. உறவினர்கள் சிலர் அதைக் கவனித்து வீட்டைஉடைத்துத் திறந்தனர்.

அப்போது, வீட்டினுள்ளே அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சரிந்து கிடந்தனர். அவர்களது வாய் துணியால் கட்டப்பட்டிருந்தது.அருகிலே குளிர்பான பாட்டில் சில கிடந்தன. இது குறித்து உறவினர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து 5 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதற்குள் 4 பேர் இறந்து விட்டனர்.குடும்பத் தலைவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார்.

5 பேரும் விஷம் கலந்த குளிர்பானத்தைக் குடித்துள்ளனர். இறந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவார். வீட்டில்கைப்பற்றப்பட்ட கடிதத்தில், மன நலம் குன்றிய தனது மகள் திடீரென இறந்து போனதாலும், இன்னொரு மகள் விவாகரத்துவாங்கி (இவரும் தற்கொலை செய்துகொண்டார்) வீட்டில் இருப்பதாலும் மனமுடைந்து அனைவரும் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது.

மேலும் தங்களது வீட்டில் உள்ள பணத்தில் வீட்டு வாடகை தவிர மீதிப் பணத்தை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்குபயன்படுத்தவும், எங்களது பிணத்தை எரித்து விடவும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+