திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று மகா தீபம் நிகழ்ச்சிநடைபெறவுள்ளது. இன்று அதிகாலை நந்தி பகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு பரணிதீபம் ஏற்றப்பட்டது.
பரணி தீபத்தைக் காண அமைச்சர்கள் பி.சி.ராமசாமி, ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட ஏராளமானபக்தர்கள் கூடியிருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் நிகழ்ச்சியைக் காண பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயிலில் மகா தீபத்தைக் காண முடியாதவர்களுக்காக கோயிலுக்கு வெளியே 3 பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
