வீரப்பன்: விஜயக்குமாரிடம் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணையின் ஒரு கட்டமாக அதிரடிப்படை டிஜிபிவிஜயக்குமார் இன்று விசாரிக்கப்படுகிறார்.

தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனும், அவனது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன்,சந்திர கெளடா, சேதுமணி ஆகியோர் கடந்த மாதம் 18ம் தேதி தர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி வனப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்ட கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ.) சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள், பொதுமக்கள்உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களது தரப்பு வாதங்களை மனு வடிவிலும், நேரிலும் தெரிவித்துள்ளனர்.

வீரப்பனால் பாதிக்கப்பட்டோரும் தங்களது தரப்பு வாதங்களை ஆர்.டி.ஓ.விடம் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் வீரப்பனைசுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினரிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.

டிஐஜிக்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல் ஆகியோர் நேற்று ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். வீரப்பன்சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ.விடம் அவர்கள் விளக்கமளித்தனர்.

இன்று அதிரடிப்படை டிஜிபி விஜயக்குமார் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராகி விளக்கம் தரவுள்ளார் என்று கூறப்படுகிறது.

வீரப்பன் சடலம்: மறு பிரேத பரிசோதனைக்கு ஆட்சேபம் இல்லை: டிஐஜி

செந்தாமரைக்கண்ணன் பேட்டி:

ஆர்.டி.ஓவிடம் விளக்கமளித்த பின்பு நிருபர்களை சந்தித்த செந்தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

வீரப்பன் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சேதுமணி, சந்திரகெளடர் ஆகியோரின் சடலங்களை எரிக்க வேண்டும் என்றுஅதிரடிப்படை கட்டாயப்படுத்தவில்லை.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்வதிலும், வீரப்பன் சடலத்தைமறு பிரேதப் பரிசோதனை செய்வதிலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.

கோவை பெண் பிரியா தற்கொலைக்கு முயன்றது அவரது குடும்பப்பிரச்சினையிலாகும். ஒரு காலகட்டத்தில் அவரைஅதிரடிப்படை திட்டங்களுக்கு பயன்படுத்தினோம். அது வெற்றி பெறவில்லை என்பதால் அந்த முயற்சியை கைவிட்டோம் என்றுசெந்தாமரைக்கண்ணன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+