பிரபாகரனின் 50வது பிறந்தநாள்
டெல்லி:
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் நேற்று தனது 50வது வயதை எட்டினார். இதையொட்டி இலங்கையின்வட-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் தமிழர்கள் கேக் வெட்டி அவரது பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.
வல்வெட்டித்துறையில் அப் பகுதி மக்கள் 50 கிலோ எடையுள்ள கேக் செய்து அதை வெட்டியும், புலிகளின் கொடியை ஏற்றியும்கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இனப் போரில் உயிர் நீத்த தங்களது 17,800 சக வீரர்களுக்கும் விடுதலைப் புலிகள் கடந்த ஒரு வார காலமாக அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். புலிகள் அனுசரிக்கும் இந்த மாவீரர் வாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி இன்று பிரபாகரன் பொது மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார். தனது பிறந்த தினத்தின்போது சக வீரர்களின் தியாகத்தைநினைவுகூறும் வாரத்தை அனுசரிக்கும் பிரபாகரன், பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவீரர் வார நிகழ்ச்சிகளைத் தடுக்கும் நோக்கில் சிங்கள வெறியர்களும் ஜனதா விமுக்தி பெரமுனா கும்பலும் பல இடங்களில்கலவரத்தை ஏற்படுத்த முயன்றன. இதையடுத்து திரிகோணமலை மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளில் ஊரடங்குஉத்தரவு அமலாக்கப்பட்டது.
புலிகளும் தமிழர்களும் நடத்திய அஞ்சலிக் கூட்டங்களைக் குலைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் ஊர்வலம் செல்ல சிங்களத்தீவிரவாதிகள் முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திரிகோணமலையில் ஒரு பஸ்சின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதை புலிகள் நடத்தியதாக ராணுவம் குற்றம் சாட்டியது. ஆனால், அதைமறுத்த விடுதலைப் புலிகள், இந்தத் தாக்குதலை ராணுவம் தான் திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களிலும் புலிகள் தங்களது கொடியை ஏற்றியதாகவும் இலங்கை அரசு புகார்கூறியுள்ளது.
ஆனால் இதையும் மறுத்துள்ள விடுதலைப் புலிகள், கடந்த ஒரு வாரமாக அனுசரிக்கப்பட்டு வரும் மாவீரர் வாரத்தை சீர்குலைக்க இலங்கைராணுவம் பலவிதமான செயல்களில் ஈடுபட்டுள்ளது. இது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என புலிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே நார்வே தலைமையிலான இலங்கை அமைதிப் பாதுகாப்புப் குழுவினர் நேற்று விடுதலைப் புலிகளைச் சந்தித்துப் பேசினர்.அப்போது அவர்களிடம் ராணுவத்தின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து புலிகள் புகார் தெரிவித்தனர்.
இனப் போரில் உயிர் நீத்த 263 தற்கொலைப் படையினர் உள்பட 17,780 விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர் வாரத்தை புலிகள்கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனுசரித்து வருகின்றனர். இந்த ஒரு வாரகால நிகழ்ச்சிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.
இதையொட்டி இன்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொது மக்களிடையே உரை நிகழ்த்துகிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications