சோனியா மொரீஷியஸ் பயணம்
டெல்லி:
இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை மறுநாள் மொரீஷியஸ் செல்கிறார்.
கடந்த 1995ம் ஆண்டு மொரீஷியஸில் ராஜீவ் காந்தி அறிவியல் மையத்துக்கு சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். அந்த மையம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அதை திறந்து வைக்க சோனியா காந்திக்கு மொரீஷியஸ் பிரதமர் பால் ரேமண்ட் பெரேங்கர் அழைப்புவிடுத்திருந்தார்.
அந்த அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக சோனியா காந்தி அங்கு செல்கிறார்.
ராஜீவ் காந்தி அறிவியல் மையத்திற்குத் தேவையான தொழில் நுட்ப உதவி, ஆசிரியர்களையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்த மையம்இந்திய- மொரீஷியஸ் நட்புறவில் புதிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொரீஷியஸ் பயணத்தின்போது, அந் நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் சீவோஸகர் ராம்கூலம் சமாதியில் சோனியா காந்தி மரியாதைசெலுத்துகிறார். மேலும் மொரீஷியஸ் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.
குடியரசுத் தலைவர் தரும் மதிய விருந்திலும், பிரதமர் தரும் இரவு விருந்திலும் கலந்து கொள்கிறார். அதுமட்டுமல்லாது எதிர்க்கட்சித்தலைவர் நவீன் ராம்கூலத்தையும் சந்தித்துப் பேசுகிறார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மொரீஷியஸ் பிரதமர் பெரேங்கர் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications