ஜெவுக்கு கடிதம் தவறில்லை:மன்மோகன்
டெல்லி:
ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை. கடிதத்தில் நான்கூறிய கருத்துக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உடன்பாடு தெரிவித்திருந்தார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழக்கை மிக கவனமாக கையாளும்படியும், அவரது உடல் நலம் குறித்துப் பார்த்துக்கொள்ளும்படியும் கோரி ஜெயலலிதாவுக்கு, மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஜெயலலிதாவும் உடனடியாகபதில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சிங் கூறுகையில், ஜெயேந்திரருக்குமிகப் பெரும் பக்தர் எண்ணிக்கை உள்ளது. அதிக அளவிலான மக்கள் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர்.
அவர்களின் உணர்வுகளை மதித்தே முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினேன். இதன் மூலம் சட்டத்தின் நடவடிக்கைகளில்நான் குறுக்கிடுவதாக அர்த்தப்படுத்த முடியாது. சட்ட நடவடிக்கையில் எனது கடிதம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கடிதத்தில் நான் கூறியிருந்த கருத்துக்களை ஜெயலலிதாவும் ஆமோதித்து தனது பதிலில் தெரிவித்திருந்தார். ஜெயேந்திரர் உடல்நலம் குறித்து மிகுந்த அக்கறை காட்டப்படுவதாக எனக்கு அனுப்பியிருந்த பதிலில் தெரிவித்திருந்தார் என்றார் சிங்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications