2வது ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் (கொலை முயற்சி வழக்கு) ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணைநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த முன்னாள் சங்கர மட பக்தர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை பைக்குகளில்வந்த ஒரு கும்பல் அரிவாள்களால் வெட்டியது. இதில் அவர்கள் உயிர் தப்பிவிட்டனர். இதையடுத்து அவர்களை ஆட்டோ ஏற்றி கொல்லமுயற்சி நடந்தது.
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் இப்போது ஜெயேந்திரரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி ஜெயேந்திரர் சார்பில் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.வி.கணேஷ்,ஜெயேந்திரர் தொடர்பான மற்றொரு வழக்கில் (சங்கரராமன் கொலை வழக்கு) ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும், கேஸ் டைரியும் உயர் நீதிமன்றத்தில் வாதாடும் அரசு வழக்கறிஞரிடம்உள்ளது.
எனவே அந்த வழக்கு விசாரணை முடியும் வரை இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தில் உள்ள ஜாமீன் மனுவுக்கும்,இதற்கும் ஒரு சம்பந்தம் இல்லை என்றார்.
ஆனால், கேஸ் டைரி இல்லாமல் இங்கு வாதாடுவதில் பலன் இல்லை என்பதை ஜெயேந்திரரின் வழக்கறிஞர் உணர வேண்டும் என்றுடி.வி.கணேஷ் கூறினார்.
இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி முருகேசன் ஒத்தி வைத்தார்.
பின்னர் 3 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போதும், உயர் நீதிமன்ற விசாரணை தொடர்வதைச் சுட்டிக் காட்டிவிசாரணையை மீண்டும் ஒத்தி வைக்கக் கோரினார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.
இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இரு ஜாமீன் மனுக்களும் இன்று ஒரே நாளில் விசாரணைக்கு வந்ததால் இரு நீதிமன்ற வளாகங்களிலும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications