சாமியார்களை திரட்டுவேன்: சு. சுவாமி மிரட்டல்!
மதுரை:
ஜெயேந்திரரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம்நடத்தப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் போன்ற மிகப் பெரிய மதத் தலைவரை சிறையில்அடைத்திருக்கக் கூடாது.
அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது இப்போது பிரச்சினை இல்லை. அவரை இப்படிக் கைது செய்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்என்பதுதான் எனது ஆதங்கம்.
அவர் தப்பி ஓடக் கூடியவர் அல்ல, ஏதாவது ஒரு வீட்டிலோ அல்லது மடத்திலேயே வைத்தோ விசாரித்திருக்கலாம். இதுதொடர்பாக உச்சநீதிமன்றமே முன்பு ஒரு முறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒருவர் தப்பி ஓடக் கூடியவர் என்றோ, சாட்சிகளைக் கலைக்க கூடியவர் என்றோ சந்தேகப்பட்டால் மட்டுமே அவரை சிறையில்அடைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
ஆனால் சங்கராச்சாரியாரான ஜெயேந்திரரை உள்நோக்கத்துடன் ஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது. சோனியா காந்தியின் நிர்பந்தம்காரணமாகவே ஜெயலலிதா இவ்வாறு செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன்.
டிசம்பர் 1ம் தேதிக்குள் ஜெயேந்திரரை விடுதலை செய்ய வேண்டும். அவரை மடத்திலோ அல்லது ஏதாவது ஒரு வீட்டிலோ வைத்துவிசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களைத் திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்சுவாமி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications