கல்யாணமாம்..கல்யாணம்: கில்லாடி ராணி!!

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வயதான ஆண்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு மோசடி செய்த பலே பெண்ணை சேலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மல்லசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. பெயருக்கேற்ப படு கிக்காக இருப்பார். 35 வயதான இவருக்கு,கடந்த 1989ம் ஆண்டு லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கு 2 குழந்தைகளும் உள்ளன.

கல்யாணத்திற்குப் பிறகு பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை ராணிக்குப் பிறந்தது. இதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழிதான்பயங்கரமானது. வயதான, வசதியான ஆண்களைத் தேர்வு செய்து அவர்களை மயக்கி கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள்இறந்ததும் சொத்துக்களுடன் எஸ்கேப் ஆகும் புதிய உத்தியைத் தேர்வு செய்தார் ராணி.

அவரது ஆசை வலையில் முதலில் சிக்கியது ராசிபுரம் மசக்காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர். அவரை ராணிகல்யாணம் செய்தபோது அவருக்கு வயது 65.

அவரைத் தொடர்ந்து சங்கராபுரத்தைச் சேர்ந்த தம்பி கவுண்டர், மல்லசத்திரம் அருகே உள்ள கோட்டபாளையத்தைச் சேர்ந்தசெங்கோடன் (70 வயது), சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நெல் வியாபாரி கந்தசாமி (இவருக்கும் 70 வயது) ஆகியோரைஅடுத்தடுத்து கல்யாணம் செய்துள்ளார் ராணி.

ராணி கல்யாணம் செய்து கொண்டவர்களில் முதல் கணவரான லட்சுமணனைத் தவிர மற்ற 5 பேரும் சொற்ப நாட்களிலேயேஇறந்து விட்டனர். ராணியே இவர்களது கதையை முடித்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது.

அவர்கள் மூலம் கிடைத்த சொத்துக்களுடன் எஸ்கேப் ஆன ராணி, சமீபத்தில் அயனாவரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரைபிடித்து அவருடன் வசிக்க ஆரம்பித்தார்.

இந் நிலையில் தனது தந்தை செங்கோடன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸில் புகார் செய்தார் அவரது மகன் ஜெகந்நாதன்.இதையடுத்து மல்லசத்திரம் போலீஸார் ராணியைக் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது அவர் செய்து கொண்ட கல்யாணங்கள் குறித்துத் தெரிய வந்தது. திருமணம் செய்த ஆண்கள்அனைவரையும் ராணி விஷம் வைத்துக் கொன்றிருப்பாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதல் கணவர் உயிருடன் இருக்கும்போதே இத்தனை கல்யாணம் செய்து கொலைப் புகாரிலும் சிக்கியுள்ள ராணியால் சேலத்தில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+