அப்புவை நெருங்கி விட்டது போலீஸ்?!
காஞ்சிபுரம்:
கூலிப் படைத் தலைவன் அப்புவை கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவன்எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் சரணடையக் கூடும் என்று தெரிகிறது.
தலைமறைவாக உள்ள அப்புவைப் பிடிக்க காஞ்சிபுரம் தனிப் படை போலீஸார்தீவிரமாக முயன்று வருகின்றனர். அப்புவைத் தேடி பெங்களூர், மும்பை, விசாகப்பட்டனம் ஆகிய ஊர்களுக்கு தனிப் படைகள்விரைந்துள்ளன. அங்கு சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் அப்புவின் இருப்பிடத்தை தனிப் படை போலீஸார் நெருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தமிழகத்திலோ அல்லது ஆந்திராவிலோ ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் அவன்சரணடையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரவி சுப்பிரமணியம் டெல்லியில் பதுங்கல்?:
அதேபோல கொலைத் திட்டம் போட்ட காண்ட்ராக்டர் ஆர்.எஸ். என்ற ரவி சுப்ரமணியம் டெல்லியில் பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ளதகவலின் பேரில் அங்கும் ஒரு தனிப்படை விரைந்துள்ளது.
இதற்கிடையே இவனும் கூட ஏதாவது நீதிமன்றத்தில் சரணடையலாம் என்று தெரிகிறது.
போலீஸ் பிடியில் ஏர்போர்ட் குட்டி:
இதற்கிடையே, அப்புவின் கூட்டாளியான ஏர்போர்ட் குட்டி எனப்படும் குட்டியை சென்னை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்துள்ளனர்.
இவனுக்கு அப்புவின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என்ற வகையில் இவன் போலீஸ் கஸ்டடியில் கொண்டு வரப்பட்டுள்ளான்.
அப்புவின் கடத்தல் விஷயங்களில் ஏர்போர்ட்டில் உதவிகரமாக செயல்பட்டு வந்தவன் தான் இந்த குட்டி. இவனை கஸ்டம்ஸ் கிரியரிங்ஏஜெண்டாக வைத்துக் கொண்டு தனது விலங்குகள தோல் கடத்தல், போதைக் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்துள்ளான் அப்பு.
காசர்கோடுக்கு ஒரு படை:
இதற்கிடையே, சங்கர மட வேத பாடசாலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமானமுறையில் மரணமடைந்த கேரள மாணவர் கேசவன் சாவு குறித்து விசாப்பதற்காக ஒரு படை படை காசர்கோடு சென்றுள்ளது.
தெனாலிக்கு ஒரு படை:
இதேபோல, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளத்தில் மர்மமான முறையில் விழுந்து இறந்த அய்யப்ப சர்மா என்ற பக்தரின்மரணம் குறித்து விசாரிப்பதற்காக மற்றொரு தனிப்படை ஆந்திர மாநிலம் தெனாலிக்கு விரைந்துள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications