டிசம்பர் 6: பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதால் தமிழகத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்களில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்துவன்முறைச் சம்பவங்கள், அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இம்முறை ஜெயேந்திரர் கைது விஷயமும் சேர்ந்து கொண்டால், மத அமைதிக்குப் பூசல் விளைவிக்கும் கும்பல்களைக்கட்டுப்பாட்டில் வைக்க அதிக கவனம் காட்டப்பட்டு வருகிறது.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரக் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. சென்னையில் எழும்பூர், சென்ட்ரல்ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் முக்கிய கோவில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு பக்தர்களும் சோதனையிடப்பட்ட பின்னரேஅனுமதிக்கப்படுகிறார்கள்.
ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகள், அவர்களது பைகள், பெட்டிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இருரயில் நிலையங்களிலும் 100 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தண்டவாளங்களையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரயில்களிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.சரக்குப் பெட்டிகளையும் மோப்ப நாய்கள் மூலம் போலீஸார் சோதனை நடத்திய பின்னரே ரயில்களில் ஏற்ற அனுமதிக்கிறார்கள்.
பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடுவோரும் பிடித்து விசாரிக்கப்படுகிறார்கள்.
சென்னை தவிர பதற்றம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தீவிரகண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications