8ம் தேதி ஜெ. ஆண்டிப்பட்டி பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வரும் 8ம் தேதி தனது தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.
வீரப்பன், வீராணம், சங்கராச்சாரியார் விஷயங்களால் ஜெயலலிதாவின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வரும்நிலையில் குஷியாகியிருக்கிறார் ஜெயலலிதா.
உளவுப் பிரிவினர் தந்துள்ள பீட்-பேக்கும் சாதகமாகவே இருக்க, மக்களவைத் தேர்தல் தோல்வி ஜுரத்தில் இருந்து ஒருவழியாகஜெயலலிதா வெளியே வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து மீண்டும் மக்கள் சந்திப்பு வேலைகளில் இறங்கியுள்ளார். முதல்கட்டமாக தனது தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.அங்கு அரசின் சார்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
8ம் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆண்டிப்பட்டசெல்கிறார். அங்கு பல நூறு கோடி அளவுக்கு உதவித் திட்டங்களை துவக்கி வைக்கும் ஜெயலலிதா அங்கிந்து தூத்துக்குடி செல்கிறார்.
அங்கு வாகைக்குளத்தில் அனல் மின் நிலைய விழாவிலும், இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் செட்டிக்குளத்தில் பின்னர் ஆசியாவின்மிகப் பெரிய காற்றாலைத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.
தூத்துக்குடி, நெல்லை விழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான். ஆனால், ஆண்டிப்பட்ட நலத்திட்ட விழா திடீரென முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணம் இருக்கும் என்று தெரிகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications