உஷா, தங்கம்: குறிஞ்சியிடம் குடைச்சல் விசாரணை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Kurinji Swamiji

காரில் குறிஞ்சி சாமியார் (வட்டமிடப்பட்டவர்)

உஷாவை ஜெயேந்திரருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகக் கூறப்படும் குறிஞ்சி சாமியார் போலீசாரிடம் ஆஜரானார். இதையடுத்துஅவரை போலீசார் 6 மணி நேரம் விசாரித்தனர்.

Ushaசென்னை தாம்பரம் அருகே படப்பையில் ஆசிரமம் நடத்தி வந்தவர் குறிஞ்சி சாமியார் எனப்படும் முரளிதரன் சாமியார். உஷாவிடம்போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னை காஞ்சி மடத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இந்த முரளிதரன் என்ற தகவலைத்தெரிவித்தார்.

காஞ்சி மடத்துக்கு வருவதற்கு முன் இந்த முரளிதரனின் ஆசிரமத்திற்கு ஸ்ரீரங்கம் உஷா அடிக்கடி சென்று வந்துள்ளார்.

(இவரை பக்தர்கள் குருஜி என்று அழைப்பது வழக்கம். ஆனால், மடத்துக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் குருஜி என்ற இந்த இந்திவார்த்தையை குறிஞ்சி ஆக்கிவிட்டார்கள். இதனால் இப்போது இவர் குறிஞ்சி சாமியார் என்ற பெயரில் தான் பிரபலமாகஅறியப்படுகிறார்).

உஷா-ஜெயேந்திரர் தொடர்புகள் குறித்து பரபரப்பு செய்திகள் பரவத் தொடங்கியதால் பயந்து போன குறிஞ்சி சாமியார் தனதுஆசிரமத்தை மூடி விட்டார். அவர் தலைமறைவாகி விட்டார். அவரது நண்பரான கேரள சாமியாரும் ஓடிப் போயிருந்தார். (இந்தசாமியாரின் வீட்டை போலீஸ் சோதனையிட்டபோது பெண்களின் பிரா, குவாட்டர் பாட்டில்கள் எல்லாம் சிக்கியது தனிக்கதை).

இந் நிலையில் குறிஞ்சி சாமியார் திடீரென காஞ்சிபுரம் போலீசாரிடம் ஆஜரானார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணைநடத்தினார்கள். இவரிடமும் காஞ்சி மடத்தில் இருந்து மாயமான 65 கிலோ தங்கம் குறித்து போலீசார் கேள்விகள் கேட்டு நெளியவைத்தனர்.

மேலும் உஷாவின் ஸ்ரீரங்கம் வீட்டுக்கு அடிக்கடி வந்து போயிருக்கிறீர்கள், இரவிலும் அங்கு தங்கியுள்ளீர்கள், கணவரைப் பிரிந்தபெண்ணிடம் உங்களுக்கு என்ன வேலை என்று போலீசார் கேள்விகளைப் போட்டபோது, இப்படியெல்லாமா கேள்வி கேப்பீங்க என்றுடென்சன் ஆகியிருக்கிறார் குறிஞ்சி சாமியார்.

Kurinji Swamijis Mutt

சாமியார் நடத்தும் மடம் அமைந்துள்ள மாளிகை
போனது வந்தது எல்லாம் உண்மையா இல்லையா என்று மீண்டும் மீண்டும் கேட்டபோது, இல்லை என்று சொல்லாமல் அமைதிகாத்திருக்கிறார்.

6 மணி நேர குடைச்சல் விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்தார் குறிஞ்சி சாமியார். அப்போது அவரது வழக்கறிஞர் விவேகானந்தன்கூறுகையில், தனக்குத் தெரிந்த தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார் சுவாமிகள். ஜெயேந்திரருக்கும், முரளிதரன் சாமிகளுக்கும்எந்தவிதத் தொடர்பும் கிடையாது. சங்கர மடத்தில் காணாமல் போன 65 கிலோ தங்கம் குறித்தும் முரளிதரனுக்குத் ரிெதயாது என்றார்.

படப்பை பகுதியில் உள்ள மலைப்பேட்டை கிராமத்தில் குறிஞ்சி சாமியாரின் ஆசிரமம் உள்ளது. இங்கு வேத பாடசாலையும் உள்ளது.இங்கு 80 மாணவர்கள் வேதம் கற்று வருகிறார்கள். இவருக்கு ஜென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியிலும் ஒரு ஆசிரமம் உள்ளதாகக்கூறப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ குருஜி முரளிதர சுவாமிகள் மிஷன் என்ற பெயரில் தனது ஆசிரம வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் குறிஞ்சிசாமிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+