1950ம் ஆண்டை நோக்கி தமிழகம்: ராமதாஸ்
திண்டிவனம்:
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உயர் கல்வியில் உரிய இட ஒதுக்கீட்டை மறுப்பதன் மூலம் கல்வியிலும் சமூக ஏற்றத் தாழ்வுகளிலும் மீண்டும்1950களில் இருந்த நிலையை நோக்கி தமிழகத்தை அதிமுக அரசு கொண்டு போய்க் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் சமீபகாலமாக பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மக்களின் கவனமும் மீடியாவின் கவனமும் இந்தப் பரபரப்பானசெய்திகள் பக்கம் திரும்பியுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசு பல பாதகமான செயல்களையும், முடிவுகளையும் எடுத்து வருகிறது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக இடங்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்த மாட்டோம் என அதிமுக அரசு அறிவித்துள்ளது.இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமூக மக்களுக்கு ஜெயலலிதா அரசு செய்துள்ள மிகப் பெரிய துரோகம்.
இந்த மக்கள் விரோத மகா பாதமாக முடிவை அரசு எடுத்துள்ளதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டில்ஒதுக்கப்பட்டிருந்த 15 சதவீத இடங்கள் இல்லாமல் போய்விட்டன. இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் உயர் கல்விஉரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை சில காலம் தொடர்ந்தால் 1950களில் இருந்த சமூக-கல்வி ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கிவிடும்.
காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை தோண்டத் தோண்ட புதுப்புதுக் கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் முழுமையாகவிசாரிக்கப்பட வேண்டும். சங்கரராமன் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய 2 பேர் (இளையவர் மற்றும் அவரது தம்பி ரகு?)இன்னும் மடத்துக்குள் தான் உள்ளனர். அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications