உச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரர் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

Jayendrarஜாமீன் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தனதுவழக்கறிஞர்களுக்கு ஜெயேந்திரர் அனுமதி கொடுத்து விட்டதாகத் தெரிகிறது.

சங்கரராமன் கொலை வழக்கிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும்ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதைத் தவிர திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு, மடத்தில் பாட சாலையில் இரு மாணவர்கள் பலியானது, மடத்தின் விடுதியில்ஒரு மாணவி மர்மமாக இறந்தது, ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்பசாமி என்ற பக்தர் குளத்தில் மூழ்கி இறந்தது, மடத்தில் 65 கிலோ தங்கம்காணாமல் போனது, அனுராதா ரமணிடம் ஆபாசமாக நடந்து கொண்டது என நாளொரு புது விவகாரத்தை போலீசார் கிண்டி எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதனால் கொலை வழக்கிலும் ஆடிட்டர் வழக்கிலும் சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் தரப்பட்டால், அடுத்தடுத்து இந்த வழக்குகளில் அவர்கைது செய்யப்பட்டு முடிந்தவரை நிரந்தரமாக உள்ளேயே வைக்க போலீஸ் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

நிலைமை கையை மீறிப் போவதால் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல ஜெயேந்திரரர் தரப்பும் முடிவு செய்துவிட்டது.

கொலை வழக்கிலும், ஆடிட்டர் வழக்கிலும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பைப் பார்த்துவிட்டு உச்ச நீதிமன்றத்தில்அப்பீல் செய்வது, அத்தோடு பிற வழக்குகளில் முன் ஜாமீன் பெறுவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரான எம்.என்.கிருஷ்ணமணி நேற்று ஜெயேந்திரரை வேலூர் சிறைக்குச்சென்று பார்த்தார். பின்னர் வெளியே வந்த கிருஷ்ணமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய ஜெயேந்திரர் எங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார். போலீஸாரிடம்ஒப்புதல் வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை என்று ஜெயேந்திரர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வரும் செய்திகளில் சற்றும் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார் என்றார் கிருஷ்ணமணி.

விரைவில் சுமூக தீர்வு: ஜெயேந்திரர்

இதற்கிடையே சிறையில் ஜெயேந்திரரை மடத்தின் நிர்வாகிகளான சுந்தரேச அய்யரும், ஸ்ரீகாரியம் நீலகண்டனும் சந்தித்தனர்.

வெளியே வந்த சுந்தரேச அய்யர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பக்தர்கள் அமைதிகாக்க வேண்டும் என்று ஜெயேந்திரர் கோரியுள்ளார். தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவில் சுமூகத் தீர்வு ஏற்படும். அதுவரைபக்தர்கள் பொறுமை காக்க வேண்டும், பிரார்த்தனையை தொடர வேண்டும் என்று ஜெயேந்திரர் அறிவுறுத்தினார்.

போலீஸார் தன்னை விசாரித்தபோது, ஒப்புதல் வாக்குமூலம் எதையும் தரவில்லை என்று சங்கராச்சாரியார் உறுதியாகக் கூறுகிறார் என்றார்சுந்தரேச அய்யர்.

சிறையில் சுந்தரேச அய்யரை 2 முறை ஜெயேந்திரர் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியது நினைவுகூறத்தக்கது. ஒரு வழியாய் அவரைசந்தித்துள்ளார் அய்யர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+