வங்கி மோசடி: ஆந்திர போலீசிடம் சிக்கும் உஷா!!
சென்னை:
சென்னை:
வங்கியில் பண மோசடி செய்தது தொடர்பாக ஸ்ரீரங்கம் உஷாவைக் கைது செய்ய ஆந்திராவிலிருந்து போலீஸ் படை சென்னைக்குவருகிறது. இந்தக் கைது நடவடிக்கைக்கு தமிழக போலீசாரின் உதவியை ஆந்திர போலீஸ் நாடியுள்ளது.
ஜெயேந்திரருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக ஸ்ரீரங்கம் உஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் ஆந்திர மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ. 33.80 லட்சம் மோசடி செய்த வழக்கில் உஷாவைக் கைது செய்யஆந்திராவிலிருந்து போலீஸ் படை வருகிறது.
உஷாவுக்கும், அவரது கணவர் நாராயணனுக்கும் கடந்த 1996ம் ஆண்டு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் திருமணம் நடந்தது. அப்போதுஉஷாவுக்கு வயது 39. திருமணம் நடந்தது கூட காளஹஸ்தியில் காஞ்சி மடத்துக்குச் சொந்தமான முதியோர் இல்லத்தில் தான்.
திருமணத்திற்குப் பின் இருவரும் சேர்ந்து குண்டேலுகுண்டா என்ற இடத்தில் செங்கல் சூளை அமைக்கத் திட்டமிட்டனர். இதற்காககாளஹஸ்தியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ. 33.8 லட்சம் கடன் பெற்றனர். இதற்காக காளஹஸ்தி, சென்னையில் உள்ள இருநிலங்களை செக்யூரிட்டியாகக் காட்டினர். அதற்கான பத்திரங்களை வங்கியிடம் தந்து கடன் பெற்றனர்.
இந்தப் பணத்தில் சுமேரு ஹவுசிங் மெட்டீரியல் லிமிடெட் என்ற சூளையை ஆரம்பிக்கப் போவதாகவும், அந்த நிறுவனத்தின் மேனேஜிங்டைரக்டராக உஷா இருப்பார் என்றும் வங்கியிடம் தெரிவித்தனர்.
ஆனால், செங்கல் சூளையை ஆரம்பிப்பதாக போக்கு காட்டிவிட்டு இருவரும் தலைமறைவாகிவிட்டனர். கடன் தொகையைத் திருப்பிசெலுத்தவில்லை. இதையடுத்து காளஹஸ்தி நிலத்தை ஜப்தி செய்ய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் முயன்றனர். ஆனால், அப்போது தான் அந்தநிலம் உஷா-நாராயணனுக்குச் சொந்தமானதே அல்ல என்று தெரியவந்தது.
சரஸ்வதி என்பரின் நிலத்தை தங்கள் நிலமாக போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து வங்கியை ஏமாற்றியுள்ளனர். இதையடுத்துஇந்த இருவர் மீதும் காளஹஸ்தி காவல் நிலையத்தில் ஸ்டேட் வங்கியின் மேலாளர் பாலகிருஷ்ண ரெட்டி 2001ம் ஆண்டில் புகார்கொடுத்தார்.
போலீசார் இருவரையும் தேடியபோது இருவரும் தலைமறைவாகியிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு நாராயணனை போலீசார் கைதுசெய்துவிட்டனர். ஆனால், ஜாமீனில் வெளியான அவர் தலைமறைவாகிவிட்டார். உஷாவைப் பிடிக்க முடியாமல் அம் மாநில போலீசார்தொடர்ந்து தேடி வந்தனர்.
ஸ்ரீரங்கம் வந்து விட்ட உஷா, வெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்ததற்கு இந்த வங்கி மோசடியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந் நிலையில் ஜெயேந்திரர் விவகாரத்தில் உஷா வெளியுலகின் கண்ணில் பட்டுவிட்டார். ஜெயேந்திரர் விவகாரத்தையடுத்து இவர்சென்னையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஆந்திர போலீஸார், அவரைக் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து காளஹஸ்தி இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறுகையில், வங்கி மோசடி வழக்கில் உஷாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாதவாரண்ட்டை கடந்த 30ம் தேதி காளஹஸ்தி நீதிமன்றம் பிறப்பித்தது. அப்படியும் கூட அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து ஆந்திரபோலீசிடம் இருந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இப்போது அவரைக் கைது செய்ய இருக்கிறோம். அதற்காக தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளோம். தமிழக போலீஸ் கிரீன்சிக்னல் கொடுத்தவுடன் எங்கள் படை அங்கு விரையும் என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications