இப்போது, பிரேம்குமார் மீது பாய்கிறார் சிங்கல்!
சென்னை:
தனது அரசை கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் சங்கராச்சாரியாரை முதல்வர் ஜெயலலிதா கைது செய்துள்ளதாக விஸ்வஇந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு எதிராக தமிழக போலீசாரிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவரைத் தவறாகக் கைதுசெய்திருக்கிறார்கள். இதனால் தான் அடுத்தடுத்து பொய்யான வழக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உடனே அவரை விடுவிக்க வேண்டும், எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். அவரைக் கைது செய்ததற்காக தமிழக அரசுபகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
சங்கராச்சாரியாரைக் கைது செய்ய ஜெயலலிதாவுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்குதல் வந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் அவரை நெருக்கினார். இதனால் தனது அரசைக் கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் சங்கராச்சாரியாரைஜெயலலிதா கைது செய்துள்ளார்.
ஆச்சாரியாருக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது. இதில் ஜெயலலிதாவும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார். இந்தத் தவறுக்காகஅரசியலில் ஜெயலலிதா பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்த வழக்கை விசாரிக்கும் எஸ்.பி. பிரேம்குமார் மதுரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். சென்னை உயர் நீதிமன்றத்தால் இருமுறைதண்டிக்கப்பட்டவர், பல வழக்குகளை சந்தித்து வருபவர். இப்படிப்பட்ட ஒரு மனிதர் எப்படி வழக்கை நேர்மையாக விசாரிப்பார்? என்றார்சிங்கல்.
சோனியாவே காரணம்:
முன்னதாக காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் அசோக் சிங்கல் கூறியதாவது:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட அன்னிய சக்தி (சோனியா) காரணமாக இருப்பதை ஜெயலலிதா உணராமல் கூட இருக்கலாம்.ஜெயலலிதாவுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்த கோப, தாபமும் இல்லை என்று தெரிய வருகிறது.
ஜெயேந்திரரைக் கைது செய்ய ஜெயலலிதாவுக்கு பெரிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பது அவருக்கே கூட தெரியாமல் இருக்கலாம்என்றார் சிங்கல்.
நேற்று வேலூர் சிறைக்கு முன் மைக் கட்டி பேச முயன்ற சிங்கலையும் அவருக்கு ஆதரவாக நின்ற பா.ஜ.க. எம்எல்ஏ ராஜாவையும் போலீசார்தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மைக் செட்டை போலீசார் பறிக்க முயற்சித்த பிறகேஅங்கிருந்து சிங்கலும் பா.ஜ.கவினரும் கலைந்து சென்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications