வழக்கறிஞர்களுக்கு கட்ஜூ நச் அறிவுரை
சென்னை:
நீண்ட நேரம் வாதாடுவதை வழக்கறிஞர்கள் குறைத்துக் கொண்டு சுருக்கமாக வாதாட பழக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.
சென்னையைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் தொடர்ந்த பொது நலன் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. தலைமைநீதிபதி கட்ஜு, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களைத் தொடங்குவதற்கு முன்பு கட்ஜு கூறுகையில், நீண்ட நேரம் வாதாட வேண்டாம். இரு தரப்புவழக்கறிஞர்களும் கூற வந்த பாயிண்டுகளை தெளிவாக, ரத்தினச் சுருக்கமாக கூற முயற்சிக்க வேண்டும்.
இசைக் கச்சேரிகளைப் போல ஆலாபனையில் ஆரம்பித்து துக்கடா வரை போகக் கூடாது. பல மணி நேரம் வாதாடுவதை வழக்கறிஞர்கள்தவிர்க்க வேண்டும். 40 வருடங்களுக்கு முன் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் வழக்கறிஞர்கள் மிகநீளமாக வாதிடுவார்கள். அதற்கெல்லாம் நேரம் இருந்தது, காரணமும் இருந்தது.
ஆனால் இப்போது லட்சக்கணக்கான மனுதாரர்கள் தங்களது மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லையே என்று வேதனையுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந் நிலையில் நாம் மணிக்கணக்கில் வாதம் செய்வதில் அர்த்தம் இல்லை என்றார்.
அதன் பின்னர் வாதங்கள் தொடங்கின.












Click it and Unblock the Notifications