உஷா விவகாரம்: காளஹஸ்தி விரைந்தது தனிப்படை
காஞ்சிபுரம்:
ஸ்ரீரங்கம் உஷா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மேல் விசாரணை செய்வதற்காக ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு தனிபோலீஸ் படை விரைந்துள்ளது.
ஜெயேந்திரருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஸ்ரீரங்கம் உஷாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் 2 நாட்கள்விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவரிடமிருந்து பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
அவருக்கும், கணவர் நாராயணனுக்கும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமான முதியோர்இல்லத்தில் வைத்துத்தான் திருமணம் நடந்துள்ளது.
இந் நிலையில் இன்று காஞ்சிபுரத்திலிருந்து ஒரு போலீஸ் படை காளஹஸ்தி விரைந்தது. சங்கர மட முதியோர் இல்ல நிர்வாகிகளைசந்தித்து உஷாவின் திருமணம் தொடர்பாகவும், அவருக்கும் மடத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் போலீஸார்விசாரிக்கிறார்கள்.
அதோடு ஸ்டேட் வங்கியில் உஷாவும், அவரது கணவர் நாராயணனும் செய்த பண மோசடி தொடர்பாகவும் தனிப்படையினர்விசாரிக்கவுள்ளனர்.
இதற்கிடையே, சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரிடம் இன்றும் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இத்துடன் அவரிடம்மொத்தம் 9 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications