டெல்லி சென்ற போலீஸ் குழு திரும்பியது; அப்பு எங்கே?
சென்னை:
அப்பு மற்றும் ரவி சுப்ரமணியத்தைப் பிடிப்பதற்காக ஹைதராபாத், டெல்லி சென்றிருந்த தமிழக போலீஸ் குழுவினர் சென்னைதிரும்பினர். ஆனால் அப்பு, ரவிசுப்ரமணியம் ஆகியோரோடு அவர்கள் வரவில்லை. இதனால் அவர்கள் கைதுசெய்யப்பட்டார்களா என்பதில் தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவுகிறது.
காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகள் குழு வியாழக்கிழமை நள்ளிரவுதமிழக அரசுக்குச் சொந்தமான செஸ்னா விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் அடுத்த நாள் பிற்பகல் வாக்கில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்புத்தூரில் (சென்னைக்கு அருகில்தான் இது உள்ளது) அப்பு பிடிபட்டதாக செய்திகள் வெளியாகின. அதேபோல டெல்லியில்வைத்து ரவி சுப்ரமணியத்தை தமிழக போலீஸ் குழு கைது செய்ததாகவும் செய்தி வெளியானது.
ஹைதராபாத் சென்ற அதிகாரிகள் குழு அப்படியே டெல்லிக்கும் சென்றதாக கூறப்பட்டது. அப்பு மற்றும் ரவி சுப்ரமணியத்தைபோலீஸ் குழு பிடித்து விட்டதாகவும் இருவரையும் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன.ஆனால் ஒரு செய்தியையும் காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.
இந் நிலையில் நேற்று இரவு அப்புவும், ரவிசுப்ரமணியமும் சென்னைக்குக் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பில்பத்திரிக்கை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.
இரவு 11.45 மணிவாக்கில் தமிழக அரசுக்குச் சொந்தமான செஸ்னா விமானம் வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் அப்புவோ, ரவிசுப்ரமணியமோ அதில் கூட்டி வரப்படவில்லை. மாறாக, எஸ்.பி.பிரேம்குமார் உள்ளிட்டஅதிகாரிகள்தான் வந்தனர்.
அவர்களை சுற்றிச் சூழ்ந்த நிருபர்களும், புகைப்படக்காரர்களும் அப்பு, ரவிசுப்ரமணியம் குறித்து சரமாரியாக கேள்விகள்கேட்டனர். ஆனால் அவர்களது கேள்விகளுக்கு அதிகாரிகள் ஒரு பதிலும் அளிக்கவில்லை.
நூற்றுக்கணக்கான நிருபர்களும், புகைப்படக்காரர்களும் குவிந்திருந்ததால் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல்காவல்துறை அதிகாரிகள் தவித்தனர். இதையடுத்து விமான நிலைய ஜீப்பின் மூலம் அவர்கள் விமான நிலையத்தை விட்டுவெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே சென்னைக்கு வருவதற்கு முன்பு ஹைதராபாத்தில் சில நிமிடம் விமானம் தரையிறங்கி நின்றிருந்ததாகக்கூறப்படுகிறது. எனவே பத்திரிக்கையாளர்களையும், புகைப்படகாரர்களையும் ஏமாற்றுவதற்காக அப்பு, ரவிசுப்ரமணியம் ஆகியஇருவரும் கார் மூலம் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படலாம் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
எப்படியோ இன்று காலை 9 மணி வரை அப்புவோ, ரவிசுப்ரமணியமோ சென்னைக்கோ அல்லது காஞ்சிபுரத்திற்கோ கொண்டுவரப்படவில்லை.
அப்பு, ரவிசுப்ரமணியத்தைப் பிடிப்பதற்காக சென்றதாக கூறப்பட்ட அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பியுள்ளதால், அப்பு,ரவிசுப்ரமணியம் என்ன ஆனார்கள் என்ற பெரும் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications