எனக்கும் சங்கரராமன் கதி...: அனுராதார மணன்
உத்திரமேரூர்:
ஜெயேந்திரரால் ஏற்பட்ட அவமானம் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்பே நான் கூறியிருந்தால் சங்கரராமனுக்கு முன்பாகவே நான் மேலேபோய் சேர்ந்திருப்பேன் என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீதிமன்றத்திற்கு கையில் பகவத் கீதையுடன் வந்த அனுராதா ரமணன் சுமார் நான்கரை மணி நேரம்அங்கு ரகசிய வாக்குமூலம் அளித்தார். 12 ஆண்டுகளுக்கு முன் ஜெயேந்திரரை சந்தித்தபோது தனக்கு நடந்த பாலியல் அவமானம் குறித்துநீதிபதியிடம் அவர் விவரித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சொன்ன புகார் குறித்து மைதிலி ராகவன் தெரிவித்துள்ள கருத்துகுறித்து எனக்குக் கவலையில்லை. நான் ஒரு இந்து. கோவில் குளத்தை சுத்தம் செய்கிறார்கள், அது மாதிரி 2,500 வருட பழமை வாய்ந்தசங்கர மடத்தில் இருந்த அசுத்தத்தை பெருக்கும் துடைப்பமாக நான் உள்ளேன்.
இந்த வாய்ப்பு எனக்கு 44 வயதிலேயே வந்திருக்கலாம். 56 வயதான இப்போது வரை காத்திருந்திருக்கத் தேவையில்லை. ஆனால் நான்அப்போதே கூறியிருந்தால், யார் என்ன செய்திருக்க முடியும்? சங்கரராமனுக்கு முன்பே நான் போய்ச் சேர்ந்திருப்பேன்.
சங்கரராமன் ஜெயேந்திரர் குறித்து எழுதி வைத்த கடிதங்கள் இருந்ததால் அவரது இறப்புக்குக் காரணம் தெரிந்தது. ஆனால் நான்போயிருந்தால் யார் காரணம் என்று யாரைக் கூற முடியும்?
நான் உங்களது குடும்பத்தில் ஒருத்தி ஆக உள்ளேன். நான் உங்களைச் சேர்ந்தவள். 12 ஆண்டுகளாக மனதில் இருந்ததைக் கூறியுள்ளேன்.நீங்கள் அனைவரும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும். ஒரு ஆணால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம் இது.
டிவி தொடர்களில் இதுபோல வந்தால் அனைவரும் அழுகிறார்கள், பரிதாப்படுகிறார்கள். ஆனால் நிஜத்தில் எனக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை. அது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
வாக்குமூலம் கொடுக்க முடிவு செய்தது நான்தான். யாரும் என்னைத் தூண்டவில்லை என்றார் அனுராதா.
சென்னை திரும்பும்போது அனுராதாவுடன் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியும் ஒரே வேனிலேயே வந்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications