ராஜ் டிவி ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
ராஜ் டிவியின் செய்தி ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதைக் கண்டித்து ராஜ் டிவி நிறுவன ஊழியர்கள், நிருபர்கள் இன்றுசென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தனியார் தமிழ் தொலைக்காட்சி அலை வரிசைகளில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் உள்ள ராஜ் டிவியின் செயற்கைக் கோள் ஒளிபரப்புஉரிமத்தை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் (திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன்தான் இந்தத் துறையின் அமைச்சர்) சமீபத்தில் ரத்துசெய்தது. அத்தோடு செய்தி ஒளிபரப்பவும் தடை விதித்தது.
லைசென்ஸ் காலம் முடிந்த பின்னரும் அதைப் புதுப்பிக்காமல் பா.ஜ.க. தலைவர்கள் சிலரது ஆதரவு இருந்த தைரியத்தில் ஒளிபரப்பைத்தொடர்ந்த ராஜ் டிவி, ஆட்சி மாறியதும் நடவடிக்கைக்கு உள்ளானது.
உள்நாட்டில் இருந்து செயற்கைக் கோளுக்கு அப்லிங்கிங் செய்யும் அனுமதியையும் ரத்து செய்ததோடு, இதற்காக ராஜ் டிவி வாங்கியிருந்தபல கோடி மதிப்புள்ள உபகரணங்களும் மத்திய சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்டன. (இந்தத் துறையின் மத்திய அமைச்சர் திமுகவைச்சேர்ந்த பழனிமாணிக்கம்)
சுங்க வரியை முறையாக செலுத்தாமல் பா.ஜ.கவினரின் துணையோடு இந்த உபகரணங்களை இறக்குமதி செய்ததால் இந்தத் தொல்லைக்குராஜ் டிவி ஆளானது.
இதனால் வெளிநாட்டு செயற்கைக் கோள் மூலமாக தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. ஆனால், சென்னையில் இருந்து அப்லிங்கிங்செய்வது சாத்தியமில்லை என்பதால் லைவ்-ரிலே செய்ய முடியாமல் தவிக்கிறது.
உரிமம் பெறாததைக் காரணம் காட்டி ராஜ் டிவி. செய்திகளை ஒளிபரப்பவும் மத்திய அரசு தடை விதித்துவிட்டதால், கடந்த சிலவாரங்களாக செய்திகள் ஒளிபரப்பாகவில்லை.
இந் நிலையில் ராஜ் டிவி நிறுவனத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றும் 450 பேரும் தங்களது குடும்பத்தினருடன் இன்று சென்னைமெமோரியல் ஹால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களோடு பல பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் பாரபட்ச போக்கைக் கண்டித்தும்,மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் ஊழியர்கள் கோஷமிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications