இந்திய அணி இன்று டாக்கா பயணம்: பாதுகாப்பு தீவிரம்
டாக்கா:
வங்க தேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக இந்திய பாதுகாப்புக் குழு கூறியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணிகொல்கத்தாவில் இருந்து இன்று டாக்கா சென்றது.
வங்க தேசம் வந்தால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஹர்கத் உல் ஜிஹாத் என்ற தீவிரவாதக் குழு மிரட்டல்விடுத்தது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய 5 பேர் கொண்டஇந்தியக் குழு டாக்கா சென்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்தியக் குழு இன்று டாக்கா கிளம்பியது.
இந்திய வீரர்கள் கிளம்பிய பஸ்சில் கியர் பிரச்சினை ஏற்பட்டதால், 25 நிமிட தாமதம் ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி முன்னர் திட்டமிட்டதேதியான டிசம்பர் 9ம் தேதிக்குப் பதிலாக 10ம் தேதி தொடங்குகிறது.
பயிற்சியாளராக ஜான் ரைட் நீடிப்பு:
இதற்கிடையே அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடும்வரை ஜான் ரைட் இந்திய கிரிக்கெட் அணியின்பயிற்சியாளராக நீடிப்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications