ஜெ. அளித்த உதவி: பத்மா மனம் நிறைந்த நன்றி
காஞ்சிபுரம்: -
குற்றவாளிகளின் முகம் தங்களுக்கு நன்றாக நினைவில் இருப்பதாகவும், எப்போது அழைத்தாலும் அவர்களை அடையாளம் காட்ட முடியும்என்றும் கொலையுண்ட சங்கரராமனின் மனைவி பத்மா கூறினார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எனது கணவர் கொலை செய்யப்பட்டபின்பு குடும்பம் நிறைய கஷ்டப்பட்டது. குழந்தைகளின் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது.எங்களுக்கு வங்கி இருப்பு ஏதும் இல்லை. அவர் இருந்தபோது மருந்துக்கடையில் மருந்து வாங்கிய வகையில் நிறைய கடன் இருந்தது.
மகள் உமா கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு எழுதக் கூட பணம் கட்ட முடியாத அளவுக்கு கஷ்டப்பட்ட நிலையில்தான், முதல்வர்ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ரூ. 5 லட்சம் உதவி அளித்தார்.
அதோடு எனது கணவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி இருக்கிறார். அவருக்கு எங்கள்இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் வீட்டுக்கு வந்து எனது கணவரை விசாரித்து சென்ற குற்றவாளிகளின் முகம் எங்கள் அனைவருக்கும் நன்றாக நினைவில் இருக்கிறது.சென்னையில் நடந்த அடையாள அணிவகுப்பில் அவர்களை அடையாளம் காட்டினோம். எங்களை எப்போது அழைத்தாலும் அவர்களைஅடையாள காட்ட முடியும்.
எனது கணவர் சங்கர மடத்துக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. போலீஸ் விசாரணையிலும்அதைத்தான் கூறினோம். எனது கணவர் கடிதங்களை எங்களிடம் காட்டுவதோ, அலுவலகப் பணிகள் குறித்து எங்களிடம் விவாதிப்பதோகிடையாது.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கு ஜெயேந்திரர்தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதங்களை நாங்கள்பார்த்தது கிடையாது. காவல் துறையினர் வந்து மேசை டிராயரை உடைத்து பார்த்தபோதுதான் நிறைய கடிதங்கள் இருப்பதைப் பார்த்தோம்என்று கூறினார்.












Click it and Unblock the Notifications