பாகிஸ்தான் ஷஹீன் ஏவுகணை சோதனை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த, 700 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் இன்று ஏவிசோதனையிட்டது.

ஷஹீன் என்ற இந்த ஏவுகணை 700 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கக்கூடியது. இதன் மூலம் இந்தியாவின்பெரும்பாலான நகரங்களைக் குறி வைத்து தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் நடத்தியுள்ள இரண்டாவது ஏவுகணை சோதனை இது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின்தற்போதைய வெளிநாட்டுப் பயணத்தில் சோதிக்கப்பட்ட இரண்டாவது ஏவுகணை இது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடத்தப்பட்டசோதனைகளில் இது ஐந்தாவது சோதனை ஆகும்.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இத்தகைய சோதனைகள் நடத்தப்படும்போது பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, இன்றைய சோதனை குறித்து இந்தியா உள்ளிட்டஅண்டை நாடுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்மைக்கால ஏவுகணை சோதனைகள் பாகிஸ்தானின் ராணுவ பலத்தில்ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

ஹடாஃப் 3 (காஸ்னவி), ஹடாஃப் 5 (கவ்ரி) , ஹடாஃப் 4 (ஷகீன்) ஆகியவை பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.இவையனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.

இந்தச் சோதனைகளால் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 29ம் தேதி, 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் காஸ்னவி ஏவுகணையை பாகிஸ்தான் ஏவி சோதனை செய்தது.இந்தியாவின் பிருத்வி ஏவுகணைக்கு இணையாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை எல்லையோர நகரங்களைத் தாக்க வல்லது.

கவ்ரி ஏவுகணை 1,500 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கக் கூடியது.

அண்மையில் வாஷிங்டனில் உள்ள அணு ஆயுத கண்காணிப்பு நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் 50 முதல் 90 அணுஆயுத ஏவுகணைகளை வைத்திருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+