விமான நிலையம்: சூட்கேஸில் குண்டுகள்
சென்னை:
சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் நாட்டவரின் சூட்கேஸில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமன் நாட்டு உள்நாடுப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முகம்மது அஜீத் என்பவர் மூட்டு வலியால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை வந்தார்.
கடந்த ஒரு மாதமாக அந்த மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிவடைந்த நிலையில் ஓமன் திரும்புதவற்காகசென்னை விமான நிலையத்திற்கு வந்தார் அஜீத்.
விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அஜீத்தின் சூட்கேஸ்களைசோதனையிட்டனர். அப்போது அதில் சில துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.
தனது அங்கீகாரம் பெற்ற துப்பாக்கி ஓமனில் இருப்பதாகவும்,தோட்டாக்களை மட்டும் சூட்கேஸில் வைத்திருந்ததாகவும் அஜீத்தெரிவித்தார்.
ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டுதுப்பாக்கித் தோட்டாக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி எச்சரித்து விட்டு அவரை ஓமன் செல்ல அனுமதித்தனர். தோட்டாக்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications