அடுத்த சாட்சியும் அந்தர் பல்டி!!!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கராச்சாரியாருக்கு எதிரான முக்கிய சாட்சிகளில் ஒருவனான சின்னா என்ற ரஜினிகாந்தும் அந்தர் பல்டி அடித்துள்ளான்.

போலீசார் தன்னை ஐஸ் கட்டிகளில் நிற்க வைத்தும், தலைகீழாக தொங்க விட்டு அடித்தும், ஊசியால் குத்தியும் போலீஸார் சித்திரவதைசெய்ததால் தான் சங்கர மடத்துக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக அவன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் கூறியுள்ளான்.

ஏற்கனவே இன்னொரு சாட்சியான கதிரவனும் சங்கராச்சாரியாக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டு பின்னர் நீதிமன்றத்தில் பல்டிஅடித்தான். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் ஒரு பல்டி அடித்து முன்பு தந்த ஒப்புதல் வாக்குமூலமே சரி என்றான்.

இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ள சின்னா காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் முன்பு காவல் நீட்டிப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டான்.

அப்போது சின்னாவின் வழக்கறிஞர் டார்வின் விஸ்டம் நீதிபதியிடம் ஒரு மனுவை அளித்தார்.

அதில் சின்னா கூறியிருப்பதாவது:

நவம்பர் 1ம் தேதி சென்னை வில்லிவாக்கம் ஜி.கே.எம்.காலனிக்கு போலீஸார் வந்தனர். என்னை போலீஸ் வேனில் அழைத்துக் காண்டுகிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி என்ற இடத்திற்குக் கொண்டு சென்றனர்.

அங்குள்ள ஒரு பங்களாவில் வைத்து என்னை கடுமையாகத் தாக்கினர். தலைகீழாக தொங்க விட்டு அடித்தனர். ஊசியாலும் குத்திசித்திரவதைப்படுத்தினர். அதன் பின்னர் பெரிய ஐஸ் கட்டிகளின் மேல் பல மணி நேரம் நிற்க வைத்து கொடுமைப்படுத்தினர்.

பின்னர் எனது ஆடைகளை கழற்றச் சொன்ன போலீஸார் தண்ணீர் நிரப்பப்பட்ட பெரிய குளியல் தொட்டியில் மூழ்கடித்துகொடுமைப்படுத்தினர். எனது வாயில் போலீஸார் உதைத்ததால் பற்கள் உடைந்து விட்டன.

நாங்கள் கூறியபடி ஒப்புதல் வாக்குமூலம் தர வேண்டும், இல்லாவிட்டால் நீயும் உயிருடன் இருக்க மாட்டாய், உனது பெற்றோர்களையும்தீர்த்துக் கட்டி விடுவோம் என்று போலீஸார் மிரட்டினர்.

நவம்பர் 10ம் தேதி வரை என்னை பல இடங்களில் தங்க வைத்து சித்திரவதை நடந்தது. 2 நாட்கள் மட்டுமே சரியான உணவு கொடுத்தனர்.மற்ற நாட்களில் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினர்.

நவம்பர் 10ம் தேதி என்னை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி பெற்று என்னை அழைத்துச்சென்ற போலீஸார் மீண்டும் தங்களது சித்திரவதையை தொடர்ந்தனர்.

அப்போது, எங்களது சித்திரவதையை நீதிமன்றத்தில் சொன்னால், மேலும் 2 நாட்களுக்கு உன்னை போலீஸ் காவலில் எடுப்போம்.அப்போது உன்னை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோட முயன்றதால் சுட்டதாக சொல்லி விடுவோம் என்று என்னை போலீஸார் மிரட்டினர்.

போலீஸாரின் அந்த மிரட்டலுக்குப் பயந்தே நவம்பர் 11ம் தேதி நீதிமன்றத்தில் நான் ஆஜர்படுத்தப்பட்டபோது எதையும் கூறவில்லை.போலீஸார் மீண்டும் என்னை விசாரிக்க மாட்டார்கள் என்று எனது வழக்கறிஞர்கள் ஆலோசனை கூறியதால் தைரியமடைந்து இப்போதுநடந்த உண்மைகளைக் கூறியுள்ளேன் என்று தனது மனுவில் கூறியுள்ளான் சின்னா.

ஏற்கனவே கதிரவனும் இதேபோல போலீஸ் மீது புகார் கூறி பல்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+