ஆடிட்டர்: ஜெயேந்திரரின் காவல் டிச. 23 வரை நீடிப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரரின் சிறைக் காவல் வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேரின்நீதிமன்றக் காவல் இன்று முடிவடைகிறது.
இதையடுத்து அவர்களது காவலை நீட்டிக்க 8 பேரையும் சென்னை சைதாப்பேட்டை 23வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியிருக்க வேண்டும்.
இவர்களில் ஜெயேந்திரர் மட்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஜெயேந்திரர் தவிர்த்து மற்றவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வேலூர் சிறையில் உள்ளஜெயேந்திரரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி விசாரணை நடத்தினார்.
பின்னர் ஜெயேந்திரர் மற்றும் 7 பேரின் சிறைக் காவலை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதே வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வெளியிடப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கை:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடிசெய்யப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஜெயேந்திரருடன் ஆலோசிக்க நாளை அவரதுவழக்கறிஞர்கள் சுப்ரமணியம், கிருஷ்ணசாமி, தியாகராஜன், சண்முகம் ஆகியோர் வேலூர் சிறைச்சாலைக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகரன், உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் குறித்துகேட்டிருக்கிறோம். அது கிடைத்ததும் அது குறித்தும் ஆராய்வோம். பின்னர் ஜெயேந்திரருடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்வோம் என்றார்.
இதே கருத்தை தியாகராஜன், சண்முகம் மற்றும் சுப்ரமணியம் ஆகியோரும் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications