நீதிமன்றத்தில் உஷா ரகசிய வாக்குமூலம்
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் உஷா ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த உஷாவுக்கு ஜெயேந்திரர் ஏராளமான பணத்தையும், வீட்டையும் வாங்கிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும்,அதிகாலை நேரத்தில் உஷாவுடன், ஜெயேந்திரர் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் சமீபத்தில் உஷா காஞ்சிபுரம் போலீஸாரிடம் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் அவர் உத்திரமேரூர் குற்றவியல் நீதிபதி ராமஜெயம் முன்பு ஆஜராகி ரகசிய வாக்குமூலம்கொடுத்தார். (அவர் நீதமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் தரப் போவதை நேற்று காலையே தெரிவித்திருந்தோம்).
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு போலீஸாரிடம் என்ன கூறினேனோ அதையேஇப்போது நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளேன் என்றார்.
அவரது வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறுகையில், வாக்குமூலம் கொடுப்பது என்பது உஷா எடுத்த முடிவு. இருப்பினும் நீதிமன்றத்தில்வாக்குமூலம் கொடுக்குமாறு போலீஸாரும் உஷாவைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.
சங்கரராமன் கொலை வழக்கில் உஷாவை ஒரு சாட்சியாக போலீஸார் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications