மீனவர்கள்: மன்மோகனுக்கு ஜெ. கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கைக் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 13 புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறுகோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை வீரர்களால், தமிழக மீனவர்கள் அடிக்கடி கடத்திச் செல்லப்படுவதும்,தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்களும், அவர்களது 3 படகுகளும் இலங்கைவீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் தேவைக்காக கச்சத் தீவு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் மீன் பிடிப்பதையே தமிழக மீனவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பகுதியில்மீன் பிடிப்பதை அவர்களது பாரம்பரிய உரிமையாக கருதுகிறார்கள். இதுகுறித்து பலமுறை மத்திய அரசுக்கு எடுத்துரைத்துள்ளேன்.

அப்படியிருந்தும் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து தாக்கப்பட்டும், கடத்தப்பட்டும் வருகிறார்கள். தற்போதுஇலங்கையின் பிடியில் 46 மீனவர்களும் அவர்களது படகுகளும் உள்ளனர். இவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதேபோன்ற ஒரு கடிதத்தை வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்குக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

79 பேருக்கு ஜெ. ரூ. 20 லட்சம் நிதியுதவி

இந் நிலையில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் படிக்க இடம் கிடைத்தும் படிக்க வழியில்லாத 79 பேருக்கு ரூ. 19.75லட்சம் நிதியுதவியை இன்று ஜெயலலிதா வழங்கினார்.

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் படிக்க அனுமதி கிடைத்தும், வசதி இல்லாததால் அதில் சேர்ந்துபடிக்க இயலாமல் இருந்த மாணவ, மாணவிகள், தமிழக அரசு உதவி கோரி ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

இவர்களில் 79 பேருக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா நிதியுதவியை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25,000 என மொத்தம் ரூ.19.75 லட்சம் நிதியை அவர் 79 பேருக்கும் நேரடியாக வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+